சீண்டினால் தூக்கு!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், வன்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் தடாலடியாக அரியானா அரசு தண்டனை சட்டங்களை இயற்ற ஆலோசித்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக, 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு என மத்தியப்பிரதேசம் சட்டமியற்றியது. இப்போது அரியானாவும் அதனைப் பின்பற்றி செக்ஸ் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்களுக்கு தூக்கு அல்லது பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை.
இதனை ஆயுள் சிறையாகவும் மாற்றும் வகையில் தண்டனை வழங்கப்படலாம். இரண்டாவது, குழுவாக பாலியல் வல்லுறவில் ஈடுபடும் அனைவருக்கும் தூக்குத் தண்டனை அல்லது இருபது ஆண்டுகள் சிறை. கூடவே அபராதத்தொகையும் உண்டு. அமைச்சரவையின் இந்த சட்டப் பரிந்துரைகளை சட்டமாக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
-ரோனி
|