நேர்மைக்கு கிடைத்த பரிசு!



அரியானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்த பிரதீப் கஸ்னி, தன் 34 ஆண்டுகள் கறாரான பணி வாழ்க்கையில் 71 இடமாறுதல்களை  சந்தித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் இறுதித் தாக்குதலாக பிரதீப்பின் பணிமூப்பு காலத்தின் கடைசி ஆறுமாத காலத்துக்கு சம்பளமே கிடைக்கவில்லை. 1984ம் ஆண்டு மாநில அரசு பணிகளில் சேர்ந்து ஐஏஎஸ் அதிகாரியாக 1997ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றவர்தான் பிரதீப். இவரது வழக்கை எடுக்க  கோர்ட் மறுக்க, மத்திய நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டு தன் சம்பளத்தை பெற்றிருக்கிறார். ‘‘இடமாறுதல்களை நான் நெஞ்சில் அணியும்  மெடல்களாகவே நினைக்கிறேன். சிறிய மாநிலத்தில் இரண்டே நாட்களில் மூன்றுமுறை ட்ரான்ஸ்பர் செய்யப்பட்ட பெருமையும் எனக்குண்டு!’’ என  புன்னகைக்கிறார் பிரதீப்.

-ரோனி