விவசாயிகளின் தோழன்!
அண்மையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் உலகையே இந்தியாவின் பக்கம் கவனிக்க வைத்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திறம்பட திரட்டி அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் சொல்ல உழைத்தவர், விஜூ கிருஷ்ணன்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தலைவராக (JNUSU) செயல்பட்ட விஜூ கிருஷ்ணன், அனைத்திந்திய கிஸான் சபையின் (AIKS) துணை செயலாளராக செயல்பட்டு வருகிறார். ‘‘கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களிலுள்ள விவசாயிகளைத் திரட்ட இரு ஆண்டுகளாக உழைத்ததன் விளைவு இது!’’ என்கிறார் விஜூ கிருஷ்ணன். அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், சிறிது காலம் விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றிவிட்டு இப்போது விவசாயிகளின் நலன்களைக் காக்க முழுநேர செயல்பாட்டாளராகச் செயல்பட்டு வருகிறார்.
-ரோனி
|