பைக் டாக்டர்ஸ்!ஆக்சிடென்ட் நடந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் முதலுதவி செய்தால் பல உயிர்களைக் காப்பாற்றலாமே என்ற சிந்தனையில் பைக் ஆம்புலன்ஸ் சேவை  தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிடென்ட் நடந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் முதலுதவி செய்தால் பல உயிர்களைக் காப்பாற்றலாமே என்ற சிந்தனையில் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தை காயினை விழுங்கியது முதல் பக்கவாதம் வரையில் பக்காவாக ஃபர்ஸ்ட் எய்ட் தருகிறார்கள்.

108க்கு போன் செய்தால் ஆம்புலன்ஸ் லேட்டானாலும் பைக்கில் வேகமாக சம்பவ இடத்துக்கு வந்து முதலுதவி செய்கிறது இந்த எமர்ஜென்சி டாக்டர் படை.  இவ்வசதியை மகாராஷ்டிரா அரசு (MEMS) அமுல்படுத்தியுள்ளது. முதலுதவிக்கு உதவியாக பேண்டேஜ், ஆன்டிசெப்டிக் மருந்துகள், ஆஸ்துமா, நெஞ்சுவலி,  பக்கவாதம், எலும்பு முறிவு இவற்றுக்கான மருந்துகளை டாக்டர்கள் தம் கிட்டில் வைத்திருக்கின்றனர். பஞ்சாப், பெங்களூரு ஆகிய இடங்களில் பைக் ஆம்புலன்ஸ்  சேவை செயல்பாட்டில் உள்ளது.   

- ரோனி