காலில் வெடிகுண்டு!சினிமா தியேட்டரில், பொது இடத்தில் பாம் வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், ஆபரேஷன் தியேட்டரில், அதுவும் பேஷன்டுக்கு  பாம் வைத்திருக்கிறார்கள் என்றால் மேட்டர் புதுசுதானே! அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள சான் ஆன்டனியோவில் நோயாளி ஒருவருக்கு காலிலுள்ள  பிரச்னையைத் தீர்க்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்கள்.

பாதி ஆபரேஷனில் வலது காலின் கீழ்ப்பகுதியில் வெடிகுண்டு டிவைஸ் தென்பட... டாக்டர்கள் ஷாக். உடனே பாம் ஸ்குவாடுக்கு போன் செய்து, விஷயத்தை  சொல்லியிருக்கின்றனர். விரைந்து வந்த பாம் ஸ்குவாட், டாக்டர்களின் உதவியுடன் வெடி குண்டை அகற்றினர். இப்போது எப்படி அங்கு பாம் வந்தது என  நோயாளியை துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்!   

- ரோனி