டும் டும்‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’, ‘சிகை’ என தனி பாணியில் நடிக்கும் கதிர், இப்போது புது மாப்பிள்ளை.‘‘ஆமா. நானும்  மாட்டிக்கிட்டேன்! நாங்க பார்த்துக்கிட்டது கூட இல்ல. அக்மார்க் அரேஞ்ஜ்ட் மேரேஜ். பேரு சஞ்சனா கீர்த்தி. MIB (Master of International  Business) முடிச்சிருக்காங்க. ஒரு கோயில்ல குடும்பம் சூழ மீட் பண்ணினோம். ஆச்சர்யம் என்னன்னா ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா இப்படி எதுலயும்  அவங்க இல்ல!

இதுலதான் இம்ப்ரஸ் ஆனேன். வாட்ஸ் அப்புல மெசேஜ் அனுப்பினா ரிப்ளை வர ரெண்டு நாட்களாகும்! எங்க ஏரியா பக்கம்லாம் விசாரிக்காம பொண்ணு கொடுக்க  மாட்டாங்க. நான் வேற சினிமாவுல இருக்கேன்... சொல்லவா வேணும்? சலிக்க சலிக்க விசாரிச்சிருக்காங்க. சஞ்சனா கிட்ட ஓபனா பேசிட்டேன். சொந்த வாழ்க்கை  வேற, வேலை வேறனு அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. சந்தோஷமா இருக்கேன்... இருப்பேன்!’’ வெட்கத்துடன் புன்னகைக்கிறார் கதிர்.

நம்ம எதார்த்த நடிகர் ரமேஷ் திலக்கும் விரும்பி கால் கட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்!‘‘ஐயாவுக்காக வெயிட் பண்ணின யங் கேர்ள்ஸ் எல்லாம்  தப்பிச்சுட்டாங்க. பாவம் நவலட்சுமி... மாட்டிக்கிட்டாங்க! எங்க காதல் உருவானது சவுண்ட் லேண்ட்ல! அதான் ‘சூரியன் எஃப்.எம்’ல. அவங்களும் ஆர்ஜேதான்.  நிகழ்ச்சி தொகுப்புல எனக்கு நான்கு வருடங்கள் சீனியர். நல்ல நண்பர்கள் நாங்க. இப்ப வரைக்கும் அப்படித்தான்.

ரெண்டு பேரும் இதுவரை ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கலை! ஆனா, ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய சர்ப்ரைஸ் கொடுத்துப்போம். அதுலயும் நவலட்சுமி கொடுக்கிற  சர்ப்ரைஸ்லாம் சான்ஸே இல்லை... பக்குவமா வீட்ல எடுத்து சொன்னோம். பச்சைக் கொடி காட்டினாங்க. சிம்பிளா கோயில்ல கல்யாணம் முடிச்சாச்சு!’’  கண்களைச் சிமிட்டி புன்னகைக்கிறர் ரமேஷ் திலக்.                      

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்