டீக்கடை கோடீஸ்வரர்!பக்கோடாவோ, டீயோ எதை விற்றாலும் செய்யும் தொழிலை நேர்மையாக, அர்ப்பணிப்பாக செய்தால் லட்சுமி நம் கல்லாப்பெட்டியில் சம்மணமிட்டு உட்காருவாள்  என்பதற்கு மகாராஷ்டிரா டீக்கடைக்காரர் எக்சாம்பிள். தனது டீக்கடையில் ஸ்ட்ராங், மீடியம் என சாயா போட்டு போட்டியாளர்களை ஓரம்காட்டி நவ்நாத் யேலே  என்பவர் சம்பாதிப்பது பனிரெண்டு லட்சம் ரூபாய். இது அவரது ஆண்டு வருமானமல்ல;

மாத வருமானம்! ‘‘பகோடா பிஸினஸ் மட்டுமல்ல; டீ விற்றாலும் வேலைவாய்ப்பு உருவாக்கலாம். இத்தொழிலின் வளர்ச்சியால் ஐ’ம் ஹேப்பி...’’ என  பூரிப்பாகிறார் நவ்நாத். பனிரெண்டு ஆட்களை வேலைக்கு அமர்த்தி மூன்று டீக் கடைகளை திறந்து பிஸினஸ் செய்து வருகிறார் நவ்நாத்!   

- ரோனி