செம போதை ஆகாது!செம போதையானால் பார்ட்டி எவ்வளவு பதட்டமான ஸ்பாட்டாக மாறும் என்பதற்கு அமெரிக்கச் சம்பவமே ரியல் உதாரணம். ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற வக்கீலான ஆன்டனி பஸ்பீ, தனது வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு விருந்துக்கு லிண்டி லூ லேமேன் என்ற கோர்ட் நிருபரை அன்போடு அழைத்தார். ஆசையாக வந்த அவரும் ஒவியங்களைவிட ஒயின் ரகங்களை லிட்டர் கணக்கில் உள்ளிறக்கினார்.

பின் என்ன? ரவுசு ஸ்டார்ட். சொடக்கு போட்டு தகராறு செய்தவர், ஆன்டனியின் வீட்டிலிருந்த ஓவியங்களின் மீது ஒயினை வீசியதோடு, சிற்பங்களைத் தூக்கியெறிந்து உடைத்தார். இந்த வகையில் ஆன்டனிக்கு 1.5 மில்லியன் டாலர்கள் நஷ்டம். லேமேன் மீது வழக்கு தொடரப்பட்டு இப்போது ஜாமீனில் ரிலீஸாகி சுற்றிவருகிறார். ஒயின் லூட்டி!.     
 

- ரோனி