வேகம்!ஏழைக் குழந்தைகளையும் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களையும் அரவணைக்கும் காட்டுப்பள்ளி சமுதாய மலர்ச்சிக்கு சான்று.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; யாழினி பர்வதம், சென்னை; வண்ணை கணேசன், சென்னை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேம்குமார், பெரியகுளம்; ஜெசி, மடிப்பாக்கம்; சைமன்தேவா, விநாயகபுரம்; ஜானகி, சென்னை; நரசிம்மராஜ், சென்னை.

விசு பாணியில் டயலாக்காலேயே கதையை நகர்த்தும் தந்திரத்தை குட்டிக்காட்டிய ‘வேலைக்காரன்’ விமர்சனம் நச்!
- ஜெயச்சந்திரபாபு, சென்னை.

யூமாவாசுகிக்கு கிடைத்த சாகித்திய அகாடமி பரிசு பற்றிய ரிப்போர்ட் ‘குங்கும’த்தின் வேகத்துக்கும் நேர்த்திக்கும் சாம்பிள்!
- ஜவகர், பெரியகுளம்; மயிலைகோபி, அசோக்நகர்; காந்தி லெனின், திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சித்த சமாஜம் பற்றிய அதிசய ஆன்மிகத் தகவல்களால் மிரண்டோம்.
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், சென்னை; அன்பழகன், அந்தணப்பேட்டை; சந்திரமதி, மடிப்பாக்கம்.

ராப் பாடகர்களை புத்தாண்டில் அறிமுகப்படுத்தியது ஹேப்பி நியூ இயர் ஸ்பெஷல்.
- யாழினி பர்வதம், சென்னை.

குடிசைத் தொழிலாக சக்கைபோடு போடும் வால்டாக்ஸ் ரோடு பாத்திரக்கடை செய்திகள் புத்தம் புதிது.
- நரசிம்மராஜ், மதுரை; முருகேசன், திருவாரூர்; த.சத்திய நாராயணன், அயன்புரம்; தேவா, கதிர்வேடு; சந்திரமதி, மடிப்பாக்கம்.

ஜெயந்தி மன உறுதியோடு ஓடிய மடிசார் மாரத்தான் வியக்கவைத்துவிட்டது.
- முருகேசன், திருவாரூர்; முத்துவேல், பட்டுக்கோட்டை; சைமன் தேவா, விநாயகபுரம்;
சத்தியநாராயணன், சென்னை; சந்திரமதி, மடிப்பாக்கம்.

நா.கி. பிரசாத் எழுதிய கவிதை, சிம்பிள் & சின்சியர்.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்.

தஞ்சை ப்ரகாஷ் பற்றிய அறியாத தகவல்களை சொல்லி ஆச்சர்யப்படுத்தும், ‘ஊஞ்சல் தேநீர்’ தேன்சுவை.
- லக்‌ஷித், சென்னை; மல்லிகா அன்பழகன், சென்னை.

‘மங்கி மேன்’ கிருஷ்ணகுமார் மிஸ்‌ரா, மிஸ்ட்ரி மேனாக வசீகரிக்கிறார்.
- ஜானகி ரங்கநாதன், சென்னை; சத்திய நாராயணன், சென்னை; பாக்யா, பட்டுக்கோட்டை; ஜெரிக், கதிர்வேடு.

வாரணாசி டோம் இன பெண்களின் கதை, கண்ணீர் வரவைத்துவிட்டது.
- நவீன்சுந்தர், திருச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; அஞ்சுகம், பட்டுக்கோட்டை; ஹாசிகா, சென்னை.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் எக்ஸ்குளூசிவ் கான்செப்டே அசத்தல்.
- ஹாசிகா, சென்னை; ஜவகர், மதுரை.

ராஜஸ்தான் மாணவர் நதீம்கானின் செய்தி, மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு. ஆம்புலன்ஸ் கார், எஸ்கேப் டான்ஸ் ஆசம் செய்திகள்.
- நவீன் சுந்தர், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ப்ரீத்தி, செங்கல்பட்டு; நவாப், திருச்சி; சிவமைந்தன், விழுப்புரம்.

- ரீடர்ஸ் வாய்ஸ்