சைலன்ட் கொலையாளி!குற்றத்தை செய்தவர்களே சொன்னால் தவிர வெளியில் தெரியாது என்பது சரிதான். அதற்காக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடும் என்றால் எப்படி? சீனாவின் ஸெஜியாங் பகுதியைச் சேர்ந்த ஸெங், 2005ம் ஆண்டு தன் மனைவியின் மாமாவை டேலன்ட்டாக தீர்த்துக் கட்டிவிட்டு அங்கிருந்து அநாயாசமாக எஸ்கேப்பானார். இன்னொரு நகருக்கு சென்று கட்டட வேலையில் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

ஒருநாள் அவரின் அடையாள ஆதாரங்களை செக் செய்த லோக்கல் போலீசுக்கு ஸெங் மீது பொறி தட்ட, அவரின் பிளட் சாம்பிள்களை சேகரித்து முந்தைய மர்டர் விஷயங்களோடு ஒப்பிட்டது. போதாதா? அதட்டிக் கேட்டதில் வாக்குமூலத்தை எழுதிக் கொடுத்த ஸெங்கிற்கு பேச்சு மட்டும் வரவேயில்லை. காரணம், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர் பேசும் திறனையே இழந்துவிட்டார்! கோர்ட்டில் விரைவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது.

- ரோனி