எங்கு என்ன
* இரு கரைகளை அணைத்து ஊரினை அழகாக்கிய ஆறுகள் இப்போது எங்கு போயின?
 * மதகுகள் திறக்க மகிழ்ச்சியில் குதித்த ஏரிகள் எல்லாம் எங்கு சென்றன?
* எருமைகள் களித்து நீச்சல் அடித்து பழகிய ஊர்புறத்து குட்டைகள் என்னதான் ஆயின?
* உயர்ந்து ஓங்கிய மரங்கள் சிறு மலைகள் மறைந்ததற்கு என்ன காரணம்?
* முப்போகம் விளைந்த முப்பாட்டன் நிலங்கள் இப்போது என்னதான் செய்கின்றன?
* யாவும் மனிதன் வசிக்கும் வீடுகளாய் மாறி மாண்டு கிடக்கின்றன!
இ.எஸ்.லலிதாமதி
|