ச்சோ ஸ்வீட்!



-ரீடர்ஸ் வாய்ஸ்

பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் ஐபிஎல் டி20 பற்றிய தகவல்கள் பிளஸ் வீரர்களின் படங்கள் சூப்பர்.
- நவீன்சுந்தர், முத்தரசநல்லூர்.

ஜிஎஸ்டி குறித்து வரிக்கு வரி விளக்கம் அளித்து எளிதில் புரிய வைத்தமைக்கு பாராட்டுகள். துல்லியமான ஜிஎஸ்டி கட்டுரை அதன் மீதான அச்சத்தை விலக்கிவிட்டது.
- சிவமைந்தன், சென்னை - 78. ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம். இரா.கல்யாணசுந்தரம், மதுரை. ப.மாணிக்கவாசகம், கும்பகோணம்.
இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. எஸ்.நாகராஜன், திருச்சி.

செப்பேடு ஆராய்ச்சியாளர் ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் உழைப்பு இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு. கலெக்டராக பணிபுரிந்துகொண்டே செப்பேடுகள் ஆராய்ச்சி செய்யும் அவரது பணி அரியது.
- மனோகர், கோவை. எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர். என்.அத்விக், சென்னை - 83. ராமகண்ணன், திருநெல்வேலி.

சிறகடிக்கும் சிந்துவின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசே அவரது சாதனைகள். பேட்மின்டன் ராணியாக நெ.1 இடத்தை சிந்து நிச்சயம் பிடிப்பார் என்ற எனர்ஜி தருகிறது அந்தக் கட்டுரை. 
- மயிலைகோபி, சென்னை - 83. சண்முகராஜ், சென்னை - 19.

Maxiமம் அழகு செய்தி குங்குமத்தைப் போலவே ச்சோ ஸ்வீட்.
- ஆர்.சண்முகராஜ், சென்னை.

தமிழ்மாதப் பெயர்களை தனது சிறுகதைகளுக்கு தலைப்பாக வைத்த வீணா முத்துராமனின் பணியால் அந்நிய மண்ணிலும் தமிழ்மணம் வீசட்டும்.
- இரா.ரவிக்குமார், திருப்பூர். எம்.எஸ்.மயில், திருநெல்வேலி. ஜானகி ரங்கநாதன், சென்னை - 4.

ஆட்டோமொபைல் பஜார் எனப்படும் பரபர புதுப்பேட்டை ஏரியாவை வலம் வந்த கட்டுரையும் புகைப்படங்களும் நியூ எக்ஸ்பீரியன்ஸ். தொலைதூரத்திலுள்ள எங்களைப் போன்றோரும் சென்னையின் முக்கிய இடங்களைப் பற்றி அறிய ‘அறிந்த இடம், அறியாத விஷயம்’ பகுதி உதவியாக உள்ளது.
- த.சத்தியநாராயணன், சென்னை - 72. அபுதாகிர், திண்டுக்கல். மனோகர், கோவை. டி.சங்கரன், குலசேகரன்புதூர். லட்சுமிபுத்திரன், விழுப்புரம்.

ஆர்யா, கேத்தரின் தெரசாவின் ‘கடம்பன்’ படத்திற்கு குங்குமம் கொடுத்த ட்ரெய்லர் அட்டகாசம். ஆர்யாவின் கம்பீரமும், தெரசாவின் அழகும் ஆசம்.
- நா.சிவக்குமார், சென்னை - 33.

இயக்குநர் ஜெகன்நாத்தின் பேட்டி அருமை என்றால், சிம்புவிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டது எளிமையின் அழகு.
- மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

‘கவணு’க்கு கரெக்டாக, ‘டோரா’வுக்கு ஜோராக விமர்சனம் தந்து விமர்சன வீரர் என்பதை மெய்ப்பித்து விட்டீர்கள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.