ஆன்லைன் ஷாப்பிங்கில் என்ன வாங்குகிறார்கள் ?



‘பணமில்லாத பரிவர்த்தனையை நோக்கி இந்தியா போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார் பிரதமர் மோடி. இதன் ஒரு அங்கமான ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் எப்படி இருக்கிறது?

* 2015ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர்: 40 கோடி

* ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விற்கும் ஸ்மார்ட் போன்கள்: 10 கோடி

* 2020ம் ஆண்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இவ்வளவு ஆகும்: 79 கோடி

* இப்போது ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை: 5 கோடி

* 2020ம் ஆண்டில் இது இவ்வளவு ஆகும்: 32 கோடி

* 2020ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பவர்களின் எண்ணிக்கை இவ்வளவு ஆகும்: 1 கோடி

* 2020ம் ஆண்டில் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு: ரூ.6,87,249,98,00,000

* ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களில் ஸ்மார்ட் போன் மூலம் பொருட்களைப் பார்த்து முடிவெடுப்பவர்கள்: 90 சதவீதம்

* ஸ்மார்ட் போன் மூலமே உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள்: 85 சதவீதம்

* ஆன்லைன் ஷாப்பிங் அறிமுகமுள்ளவர்களின் மாதாந்திர செலவில், ஆன்லைன் ஷாப்பிங் பட்ஜெட்: 11 சதவீதம்

* ஆன்லைனில் ஒரு பொருளை நம்பி வாங்க யாரின் பரிந்துரை முக்கியம் என்ற டாப் 3 பட்டியல்: குடும்பத்தினர், நண்பர்கள், ஆன்லைன் விமர்சனங்கள்

* ஆன்லைனில் இந்தியர்கள் அதிகம் வாங்கும் டாப் 3 அயிட்டங்கள்: கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் பொருட்கள், கம்ப்யூட்டர் தொடர்பான பொருட்கள், ஃபேஷன் அயிட்டங்கள்

* ஆன்லைனில் இந்தியர்கள் பொருட்கள் வாங்க டாப் 3 காரணங்கள்: குறைந்த விலை, தரம், தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் இருப்பது

* ஆன்லைனில் இந்தியர்கள் அதிகம் பொருட்கள் வாங்கும் சீஸன்: பெருமளவு தள்ளுபடி அறிவிக்கும் சீஸன்கள்

* ஆன்லைன் பர்ச்சேஸ் பற்றி இந்தியர்கள் அதிகம் பேசுவது எப்போது? வீட்டிலும், அலுவலகத்திலும் சாப்பிடும் நேரத்தில்!