வலைப்பேச்சு



நிருபர்: டாக்டர்... உங்க வாழ்க்கையில நீங்க செய்த மிகப்பெரிய தவறு எது?
டாக்டர்: ஒரு மாசத்துக்கு முன்னாடி கன்சல்டிங் ஃபீஸை 400 ரூபாய்ல இருந்து 500 ரூபாயா ஏத்தினதுதான்..!

மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீகார் மாநிலத்தை விட்டு வெளியே செல்லலாம் - பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்
மது குடிக்க முடியாமல் தவிப்பவர்களை அன்புடன் வரவேற்கிறோம் - தமிழர்கள்
- பார்த்திபன் தா

@palanikannan04
நாம மத்தவங்களுக்கு போன் பண்ணும்போது, நம்ம நம்பரைப் பார்த்ததும் அவங்க முகத்துல சின்னதா ஒரு புன்னகை வர்ற மாதிரி வாழ்ந்துட்டாலே போதும்!

@amuduarattai
‘மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்’ என்பதை யாரோ ஒரு கனமான போலீஸ்காரரைப் பார்த்து பயந்த ஒருவர்தான் கூறி
யிருக்க வேண்டும்.

@naiyandi
‘சிலரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’ என சலித்துக்கொள்ளாதீர்கள்! போய் வேலையைப் பாருங்கள்... நமக்குப் புரியாத விஷயங்கள் நிறைய உள்ளன.

‘கீரைக்காரம்மா கிட்ட பேரம் பேசாதீங்க’ என்ற தேச பக்தர்கள்தான் இப்போது ‘டெபிட் கார்டுதான் இனி நல்லது’ என்கிறார்கள்.

மாமனார் வீட்டுல டி.வி. பார்க்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா? இல்லையா?
‘‘நம்பிக் கட்டினோம்... நன்றாக இருக்கிறோம்!’’

‘பழம் தின்னும் கிளியும், பிணம் தின்னும் கழுகும்’ ஒரே பறவை இனம்தான். ஆனால் தரம் வேறு, தன்மை வேறு... அப்படித்தான் சில மனிதர்களும்..!
- பைபாஸ் என். ராம்குமார்

@Kozhiyaar
வாழ்க்கையும் கிரிக்கெட் மாதிரிதான்! ‘எந்தப் பந்தை எப்படி அடிக்கலாம்’ என்பதைவிட, ‘எந்தப் பந்தை அடிக்காமல் விடவேண்டும்’ என்று தெரிந்திருக்க வேண்டும்.

திருப்பதியிலே இளநீர் 10 ரூபாய்தான். ‘‘ஸ்வைப்பிங் மெஷின் இருக்கா’’னு கேட்கலாம்தான். கையிலே அந்தம்மா அருவாள் வெச்சிருக்கே!

ரூபாய் மாற்ற விவகாரத்தை இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள் - பிரதமர் பேச்சு. 
# இருக்காதா பின்னே? பேங்க்ல, ஏ.டி.எம்.ல கல்யாணத்துக்கு, காதலிக்க பொண்ணு கிடைக்குதாமே!
- வெ. பூபதி

கடந்த 20 வருடங்களுக்குள், குடும்பத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரையும் பிரித்துவிட்டது இந்த வியாபார உலகம்... ‘தனித்தனி
சோப்பு’ என்று...
- நாஸிர் மொஹமத்

@kumarfaculty
பேரனின் லீவ் லெட்டரில் ‘தாத்தாவும் பாட்டியும்’ செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள்!

@VignaSuresh
மகள் தீர்மானமாக ‘கைக்கடிகாரம் வேண்டாம்’ என்கிறாள். நேரத்தை நாம் ஆள வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருக்கிறது.

@tamilhumourjoke
மோடி சார்! அப்படியே இந்த சில்லறைக்கு சாக்லெட் தர்றாங்களே... அதையும் தடை பண்ணுங்க! உங்களுக்கு புண்ணியமா போகும்.

‘‘மாஸ்டர்... ஸ்ட்ராங்கா ஒரு டீ!’’
‘‘சில்லறையா இருக்காண்ணே..?’’
‘‘டெபிட் கார்டே இருக்குப்பா... கவலைப்படாதே!’’
‘‘அத வச்சி என்னா பண்றதுண்ணே..?’’
‘‘என்னாப்பா நீ... பிரதமரே ரொக்கமா செலவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாரு. இனி கார்டுதாம்பா தம்பி!’’
‘‘அண்ணே... டீ குடுக்குறேன், குடிச்சிட்டு போங்க. காசு கூட வேணாம். காலையில பிச்சை போட்டதா நினைச்சுக்குறேன். ஆனா, ‘பிரதமரு சொன்னாரு... கவர்னரு சொன்னாரு’ன்னு கார்டை தூக்கிக்கிட்டு வராதீங்கண்ணே... அப்புறம் சுடுதண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்திடுவேன். பார்த்துக்கங்க!’’
‘‘ச்சே... காலையிலயே நம்மள பிச்சைக்காரர் ரேஞ்சுக்கு கொண்டாந்துட்டீயேப்பா...’’
‘‘நானா கொண்டாந்தேன். பண்ணதெல்லாம் ஒங்க பிரதமருதான்... அவரப் பாத்து கேளுங்கண்ணே...’’
‘‘சரி விடுப்பா... பிச்சைன்னு ஆகிப் போச்சி. ரெண்டு வடையும் சேர்த்துப் போடுப்பா..!’’
- கருப்பு கருணா

தட்ல நாலு இட்லிய வச்சி ரெண்டு வகை சட்னிய ஊத்துனா அது வீடு... அதே ரெண்டு இட்லிய வச்சி நாலு வகை சட்னிய போட்டா அது ஹோட்டல்... தட்ஸ் ஆல்..!
- பொம்மையா முருகன்

@Janu_BM
பிரபாகரன் அயல்நாட்டில் பிறந்திருந்தால் இந்தியா கொண்டாடியிருக்கும். காஸ்ட்ரோ தமிழனாய் இருந்திருந்தால் தூக்கிப் போட்டு மிதித்திருக்கும்.
# நிதர்சனம்

‏@amuduarattai
மேனேஜர்கிட்ட ‘ரெண்டு நாள் லீவ்’ கேட்டேன். ‘‘ஏ.டி.எம்ல பணம் எடுக்கப் போறீங்களா’’ன்னு கேட்கிறார்.

@naiyandi
‘என்னைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது’ன்னு மிரட்டுபவர்கள் கடைசி வரைக்கும் தங்களை யாரென்றே சொல்வதில்லை!

பொண்ணு: நீங்க சிகரெட் புடிப்பீங்களா?
பையன்: ஆமா!
பொண்ணு: எவ்ளோ நாளா இந்தப் பழக்கம்!
பையன்: கிட்டத்தட்ட பத்து வருஷமா...
பொண்ணு: ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட்?
பையன்: மூணு பாக்கெட்...
பொண்ணு: ஒரு பாக்கெட் சிகரெட் எவ்வளவு?
பையன்: 40 ரூபாய்.
பொண்ணு: அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவா செலவு பண்றீங்க!
பையன்: ஆமா!
பொண்ணு: அப்போ... மாசத்துக்கு 3,600 ரூபாய்!
பையன்: ஆமா!
பொண்ணு: வருஷத்துக்கு 43,200 ரூபாய்!
பையன்: கரெக்டா சொன்னீங்க!
பொண்ணு: பத்து வருஷத்துக்கு 4,32,000 ரூபாய்!
பையன்: ஆமா!
பொண்ணு: சிகரெட் அடிக்காம நீங்க இந்தக் காசை சேர்த்து வச்சிருந்தா ஒரு கார் வாங்கிருக்கலாம்..!
பையன்: ஓ... அப்படியா! சரி, நீங்க தம் அடிப்பீங்களா?
பொண்ணு: ச்சீ... ச்சீ... எனக்கு அந்தப் பழக்கமே கிடையாது..!
பையன்: அப்போ... உங்க கார் எங்க நிக்கிது?
பொண்ணு: !!!!!
# கொய்யால... யாருகிட்ட வந்து அட்வைஸ் பண்ணுறே..!

6 பேக் வைக்கலாம்னு ஜிம்முக்கு போய்க் கேட்டா, ஃபீஸ் 1000 ரூபாயாம்... 500 ரூபாய்தான் இருக்கு, இந்த மாசம் 3 பேக் மட்டும் வைப்போம்!
- பூபதி முருகேஷ்

‘‘ஏம்ப்பா, மாடு வாங்கணும்னு லோன் வாங்கறியே... கரெக்டா கட்டுவியா?”
“என்ன சார் நீங்க. கட்டல்லைன்னா ஓடிடாதா? நிச்சயமா கட்டி வைப்பேன் சார்.”
“நான் கேட்டது மாட்டை இல்லை...”
“மாடு இன்னும் வாங்கவே இல்லையே, அதை எப்படிக் கேப்பீங்க?”
“அப்ப வாங்கினப்புறம் கேட்டா?”
“வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது!”
“மாட்டைக் கேக்கறதுன்னு நான் சொன்னது அதை இல்லை...”
“பின்னே எதை?”
“மாடு வாங்கினப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்...”
“மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படிக் குடுப்பேன்?”
‘‘ஐயோ... சரி! ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா? கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை...”
“நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தான் கேட்டீங்க?”
“உன்னை ஏன் கட்டணும்?”
“என்னைக் கேட்டா? நீங்கதானே சொன்னீங்க, கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு. அப்ப என்னைன்னுதானே அர்த்தம்?”
“கேட்டது உன்னைத்தான்!”
“அப்படீன்னா ஏன் என்னைக் கட்டணும்னும் நீங்களே சொல்லிடுங்க!”
“கட்டறதுன்னா மாடும், நீயும்தானா? மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா?”
“மூணாவதான்னா... நீங்கதான் இருக்கீங்க?”
“என்னைப் பிடிச்சிக் கட்டிடு. இல்லைன்னா உன்னைக் கடிச்சாலும் கடிச்சிடுவேன்...”
“அப்பவே சொன்னாங்க, அந்த பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்னு!”

@Bubbly_Girl__
எல்லோருடைய வாழ்க்கைப் புத்தகத்திலும் கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது!

@lakschumi
குழந்தை சிரிக்கும் எந்தக் காரணத்துக்கும் பெரியவர்கள் சிரிப்பதில்லை. பெரியவர்கள் அழும் எதற்கும் குழந்தைகள் அழுவதில்லை!

@chevazhagan1
‘‘இந்த ‘மாவோ’ன்னா பீடா கடையில விப்பாங்களே, அதானே’’ங்குறான் ஒருத்தன். ‘‘இந்த ‘சேகுவேரா’ன்னா புரோட்டாவுக்கு ஊத்துவாங்களே, அதானே’’ங்குறான் இன்னொருத்தன்... அடேய்களா!

திகில் படம் தராத பயத்தை மனைவியின் 5 மிஸ்டு கால் தந்துவிடுகிறது..!

‏‏@BoopatyMurugesh
மோடி என்னடா புதுசா சொல்றது? நம்மூரு கண்டக்டர்லாம் பல வருஷமாவே 1000, 500 நோட்டு வச்சுருக்கவனை ‘செல்லாது’ன்னு பஸ்ஸ விட்டு இறக்கி விட்ருவானுங்க!

@pshiva475
‘‘என் புருஷன கெடுத்ததே இவன்தான்’’னு நண்பனுக்குக் கேட்கிற மாதிரி மனைவி திட்டினாலும், கண்டுக்காம வீட்டுக்கு வர்ற மாதிரி நாலு நண்பனையாவது சம்பாரிக்கணும்!

@aruntwitz
குழந்தைகள் ‘அண்டர் வேர்’ யூஸ் பண்ணக் கத்துக்குறதுக்கு முன்னாடியே ‘ஆண்ட்ராய்டு’ யூஸ் பண்ண கத்துக்குற தலைமுறை இது.