வலைப்பேச்சு



வளமான, அமைதியான, எழுச்சியான தமிழகத்தை உருவாக்கி இருக்கிறேன்-ஜெயலலிதா
‪#‎ அப்படியே‬ அது எங்க இருக்குன்னும் சொல்லிடுங்கம்மா...
- ராஜா அறந்தாங்கி

அன்றே சரத்குமார் பாடி வைத்தார்... ‘வருவியா, வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சு கா’ என. நமீதாவும் அதிமுகவில்.
- கரூர் கிட்டு

உங்களுக்கு ‘தவ’ வாழ்க்கை; எங்களுக்கு ‘வத’ வாழ்க்கை!
- ரூபன் ஜே
 


சூப்பர் ஸ்டாருக்கு திட்டமிட்டு பவர் ஸ்டாரில் திருப்தியடையும் பா.ஜ.க.வின் நிலைமையில்தான் வாழ்க்கை நம்மை வைத்திருக்கிறது...
- கவிதா பாரதி

“மம்மி மீட்டிங்குக்கு போகும்போது பிரியாணி இலவசம்...”
“திரும்பும்போது..?”
“அமரர் ஊர்தி இலவசம்?”

‘‘என்னடி? உன் மாமியார் உனக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்கிறதா சொன்னியே, பிரச்னை சரியாயிடுச்சா?’’
‘‘இல்லடி! ‘அந்தப் பொதுக்கூட்ட’த்துக்கு என் மாமியாரை அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன். பிளானும் ஓகே ஆகிடும்... பழியும் நம்ம மேல விழாது. பஸ் வந்ததும் அனுப்பிவிட வேண்டியதுதான்!’’
‪#‎ இந்தத் திட்டத்துக்குப் பேரு‬,
‘கூட்டிட்டு வாங்க... தூக்கிட்டுப் போங்க!’

கேரளாவில் ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகம்... தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தும் முறை அறிமுகம்!

ஊருல ‘‘ஆளும் கட்சி பிரசாரமெல்லாம் எப்படி?’’னு கேட்டேன். ‘‘ஒரு முறை போனா ரூ.200, ஒரேடியா போனா ரூ.200000. அவ்வளவுதான்’’னு சொல்லிட்டாங்க..!

@Kozhiyaar 
குடிக்கிற தண்ணியை எல்லாம் சூரியனே உறிஞ்சுக்கிட்டா, கிட்னிக்கு எங்கிருந்து தண்ணி போகும்!?

@senthil68502176 
ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்: பாண்டிச்சேரியில் ஜெ.
# சேம் ஃபீலிங் இன் தமிழ்நாடு மதர்...

@thoatta 
கேப்டன் பேப்பர்ல விசிறி விட்டா புகழ்றாங்க... அதுவே வெறுங்கைல விசிறி விட்டா அடிக்கிறாருன்னு சொல்றாங்க... பொல்லாத உலகமடா!

@imgowraina 
பொய் என்பது வலிநிவாரணி மாத்திரை மாதிரி... அந்த நேரத்துக்கு வலியைப் போக்கும். ஆனா பின்னாடி சைட் எஃபெக்ட் இருக்கும்.

குதிரைக்கு கால் முறிஞ்சா தேசிய செய்தி! கூட்டத்துல ஜனங்க செத்தா?
- ரவி குமார்
 


கனமழையும் வெள்ளமும் கூடி அடித்துச் சென்ற சாதி, மதத்தை... கட்சிகளும், தேர்தலும் தேடித் திரும்ப எடுத்து வந்து விட்டன!
- பூபதி முருகேஷ்
 
கத்தரி வெயிலைக் குறைசொல்வதை விட கத்தரிக்காய் செடி வளர்ப்பது இனிது!
- பிச்சைக்காரன் எஸ்ஜிஎல்
 
‘ஒபாமாவுக்கே ஆலோசனை தருபவர் எங்க அம்மா - குண்டு கல்யாணம்

# வைகோ, விஜயகாந்த், பவர் ஸ்டார் என்று நம்மை மகிழ்விப்பவர் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது!
- ஜீவா நந்தன்

‏@Kounter_twitts 
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஃபிகரா தெரிஞ்ச பொண்ணுக எல்லாம் இப்ப மேக்கப் இல்லாத ஹீரோயின் மாதிரி தெரியிறாங்க. என்ன பண்றது? அடிக்கிற வெயில் அப்படி!

@PeriyaStar 
கிரீன் சிக்னல் விழுந்தவுடன் ஹார்ன் அடிக்கத் தெரிந்த பலருக்கும், ரெட் சிக்னல் விழுந்தவுடன் பிரேக் அடிக்கத் தெரியவில்லை!

@udanpirappe 
ஆம்புலன்சில் 500 கோடி போறதை  கண்டுக்க மாட்டாய்ங்க... 50 ஆயிரம் ரூபாய் கொண்டுபோற இளிச்சவாய் வியாபாரியத்தான் பிடிப்பாங்க!

@nithil_an 
மகளுக்கு டோரா எக்ஸாம் பேடு வேணுமாம். தேடிப் பார்க்கணும். காலண்டர் அட்டைல பரீட்சை எழுதின காலம் கண் முன்னாடி வந்து போகுது.

நேத்திக்கு ஒரு தமிழ் பேய்ப் படம் பாக்கப் போயிருந்தேன். ஷோ முடியும்போது இரவு சுமார் 11.45 மணி. என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அண்ணாவைக் காணோம். போன் பண்ணா, ‘‘இங்க ஒரு இடத்துல மாட்டிக்கிட்டேன். நீ ஒரு ஆட்டோல வீட்டுக்குப் போய்டு’’னு சொன்னான்!

ஆட்டோ கெடைக்கல. மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன். விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது. எங்க ஏரியாவுக்குப் போகும் வண்டிதான். வண்டி மிக மிக மெதுவா நகர்ந்து வந்தது. கை காட்டியும் அது நிற்கவில்லை.  யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிக்கொண்டேன். டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார். என்ஜின் சத்தம் கேக்கலை. ஆனால், வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. நடத்துனர் மற்றும் பயணிகள் யாரும் இல்லை.

மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டது. ‘நடக்கறது ஒருவேளை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா இருக்குமோ’ என்று பயம்!
திடீர்னு என்ஜின் பகுதியில இருந்து ஒரு பெரிய சத்தம். விளக்குகள் எரிய ஆரம்பித்தன. தடதடவென நடத்துனரும் சுமார் 20 பயணிகளும் வண்டிக்குள் ஏறினார்கள்..!

என்னைப் பார்த்து, ‘‘எருமை மாடு! வண்டி நின்னு போச்சுனு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரைக் குடுத்து தள்ளிக்கிட்டிருக்கோம்... நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துக்கிட்டியே... அறிவு இருக்கா?’’னு செம டோஸ் விட்டாங்க. சத்திய சோதனை!

ஒரே ஒரு ஃபேனை போட்டுக்கொண்டு ‘தவ வாழ்க்கை’ வாழலாம் என நினைத்தால் யாருக்கோ பொறுக்கவில்லை. கரன்ட்டை பிடுங்கிவிட்டார்கள்.
ஜெயலலிதா எப்படித்தான் 30 டன் ஏசியில் மேடையில் உட்கார்ந்து கொண்டு தவ வாழ்க்கை வாழ்கிறாரோ? பொறாமையாக இருக்கிறது.
- செல்வ குமார்

‘‘கோவிச்சுக்கிட்டு லெட்டர் எழுதி வச்சுட்டு தற்கொலைதான் பண்ணிக்கப் போயிருப்பாங்கனு எப்படி சொல்றீங்க..?’’
‘‘கடைசியா அ.தி.மு.க பொதுக்கூட்டத்துக்கு லாரியில ஏறிப் போனத சிலர் பார்த்திருக்காங்க சார்!’’
- தடாகம் முகுந்த்
 
ஜெயலலிதாவுக்கு 2 கோடி ரூவா கடன் இருக்காம்... ஐயோ பாவம்!
- ரிட்டயர்டு ரவுடி

மதுரையில் மே 19ம் தேதி முதல்வராகப் பதவியேற்பேன்-விஜயகாந்த்
# அன்றே அன்புமணி சென்னையிலும், கார்த்திக் பரமக்குடியிலும், சீமான் ஈழத்திலும் பதவி ஏற்பார்கள்.

@Im_bharathi 
எங்கள் கூட்டங்களில் யாரும் செத்ததில்லை - தமிழிசை
# அந்தக் கூட்டம் எங்க இருக்குனுதான் தேடிட்டு இருக்கோம்ங்க!

@chithradevi_91 
குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்று குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளுங்கள்... அவர்கள் தங்கள் பொம்மைகளை அழ விடுவதில்லை!

தொவச்சுப் போட்ட துணியெல்லாம் ஒரு மணி நேரத்துல காஞ்சிருது... குளிச்சிட்டு போட்ட சட்டை ஒரு மணி நேரத்துல நனைஞ்சிருது... முடியல!

@skpkaruna 
‘பஸ் கட்டண உயர்வுக்காகவும், வெள்ள அலட்சியத்துக்காகவும் போராடிய ஒரே கட்சி அதிமுக’ என டிவியில் ஜெ முழங்க, திடுக்கிட்டேன். அது பாண்டிச்சேரியாம்!

@ThePayon 
உலகம் உன்னைச் சுற்றி இயங்க வேண்டும் என்றால், அது இயங்கும் இடத்திற்கு நடுவில் போய் நின்றுகொள்!

இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ‪உப்புமா‬. இதே நிலை நீடித்தால், அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு, தற்கொலை செய்து கொள்வதை விட, வேறு நல்ல வழி தெரியவில்லை. ஆமா! அடுத்த கூட்டம் எந்த ஊர்ல...
‪#‎ செய்வீர்களா‬... இனி உப்புமா செய்வீர்களா‬?
- இளையராஜா அனந்தராமன்

காபந்து அரசின் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதியம் ஒரு மணி வெயிலில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, அவரின் போயஸ் தோட்டத்து இல்லத்தில் இருந்து மவுண்ட் ரோட் வழியாக சிக்னலில் எல்லாம் நின்று, போக்குவரத்து விதிகளை ஃபாலோ செய்து, ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகம் சென்று, மதுவிலக்கை படிப்படியாகக் குறைப்பது எப்படி என்று ஆலோசனை நடத்திவிட்டு, மீண்டும் பத்து நிமிடத்தில் வந்தவழியே போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்துவிட்டால் போதும்... தவ வாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படி வாழவேண்டும் என்று வெயிலும் இயற்கையும் கற்றுக்கொடுத்து விடும்...

- ஜாக்கி சேகர்