சூர்யாவின் சொத்து!



வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வழக்கமான அளவில் பறவைகள் வருவதற்கு சென்னையைக் கலங்கடித்த மழை பேருதவி செய்திருக்கிறது என்ற தகவல் உற்சாகச்சாரல் தூவியது.
- கே.டி.முத்துவேல், கருப்பூர்.

மதன் கார்க்கியின் ‘டவுன்லோடு மனசு’ முழுக்க இவ்வளவு நிஜங்களா? தாராளமாய்த் திறந்து, கொட்டித் தீர்த்து விட்டாரோ?
- மயிலை கோபி, சென்னை-83.



எனக்கு நான்தான் எஜமான் என்ற ரீதியில் ‘எனக்கு நானே ரசிகன்’ என்று சொல்லும் சூர்யாவின் தளராத தன்னம்பிக்கைதான் அவரது பெரும் சொத்து!
- ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘கோடைக் காலத்தில் மட்டுமல்ல... இயல்பாகவே குழந்தைகளின் குறும்புத்தனம் சரிதான்’ எனப் பொளேர் உண்மையைக் கூறிய மருத்துவர் கார்த்திக்கின் பதில் அற்புதம்!
- ஜி.பிரேமா, தூத்துக்குடி.

ரீமேக் கதைகளுக்கு மித்ரன் ஆர்,ஜவகர் கொடுத்த சமாளிபிகேஷனுக்காகவும் அசரடிக்கும் அழகி இஷாவுக்காகவும் அந்தப் படத்தைப் பார்த்தே தீரணும்!
- க.பெ.இனியவன், திருப்பூர்.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் நம்பிக்கைப் பயணம், திறமையிருந்தும் வாய்ப்பு இல்லாத பல வீரர்களுக்கு எனர்ஜி பூஸ்டர்தான்!
- என்.ராம், சென்னை-78.

கேரளா ரயில் விளம்பர ஐடியாவை இப்படி பளிச்னு வெளியே சொல்லிட்டீங்களே, நம்ம ஆளுகளுக்கு இது தெரிஞ்சா... நம்பர் பிளேட் முதற்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டிருவாங்களே!
- எஸ்.நாராயணமூர்த்தி, புதுச்சேரி.

சமூக அக்கறை குறித்த ராஜுமுருகனின் கடைசி பதில் நெகிழ்ச்சியும் உருக்கமுமான கலர்ஃபுல் தோரணம்!
- எம்.சண்முகவேல், திருவள்ளூர்.

ஒன்றரை ஆளுயரத்தில் 120 கிலோ சைக்கிளை இந்த வெயிலில் எப்படி ஓட்டுவது? உடல் குறைப்பிற்கு இப்படி எகிடுதகிடான கண்டுபிடிப்பா? முடியல..!
- எம்.ஜி.மோகன் சுரேஷ், நாகர்கோவில்.

இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கத் தயாராகும் நேற்றைய + இன்றைய மாணவர்களின் மன நிலையை தமிழகம் முழுக்க பல்ஸ் பார்த்திருக்கிறீர்கள். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள் என்ற உண்மையை இளைய தலைமுறையின் குரல் உணர்த்துகிறது.
- எஸ்.ரவி, விழுப்புரம்.

சமண மடங்களின் அறச்செயலையும், ராமகிருஷ்ண மடத்தின் ஒதுங்கும் தன்மையையும் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்த எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்து மனதைச் சுட்டது. விவேகானந்தர் வகுத்த பாதையை அவர்கள் உணர வேண்டும்.
- எம்.தீபா, தஞ்சாவூர்.

அட்டையில்: காஜல் அகர்வால்
ஸ்பெஷல் படம்: முத்துக்குமார்
(நன்றி: தி சென்னை சில்க்ஸ்)