சக்தி



ச.கோபிநாத்

‘‘சார், வாங்க... விக்ரம் ரெடியாதான் இருக்கான். உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்’’ - மகனுடைய டியூஷன் மாஸ்டரை வரவேற்றார் சிவா. ‘‘ம்... ஓகே சார்... நான் பார்த்துக்கறேன்!’’ ‘‘சார், ஒரு நிமிஷம்... விக்ரம் எப்படி படிக்கிறான் சார்?’’
‘‘ஏங்க? நல்லாத்தான் படிச்சிட்டு இருக்கான்!’’



‘‘இல்ல சார், அவன் வயசுப் பசங்க எல்லாம் முக்கியமான சப்ஜெக்ட்கள்ல நூற்றுக்கு நூறு வாங்கும்போது இவன் எப்பவும் 60, 70லயே நிக்கறான். அதான் என்ன பிரச்னைனு...’’ - சிவா இழுத்தார். ‘‘சார், ஒரு நிமிஷம் இப்படி வர்றீங்களா..? உங்க வீட்டு டி.விதான். அதைத் தூக்குங்க, பார்க்கலாம்!’’ ‘‘எதுக்கு சார்? இவ்வளவு பெரிய டி.வியை என் ஒருத்தனால எப்படி தூக்க முடியும்?’’ என்றவர் அதைத் தூக்க முயற்சித்து முடியாமல் நிமிர்ந்தார்.

‘‘ஏன் சார், ஒரு சின்ன டி.வி... அதை உங்க ஒருத்தரால தூக்க முடியாது. அதை தூக்கற சக்தியிருக்கறவங்களால முடியும்னு சொல்றீங்க. அதே மாதிரிதான் உங்க பையனால என்ன முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்டு இருக்கான். அவனை போய் இன்னும் இன்னும்னு விரட்டினா, அவனுக்கு படிப்பு மேல வெறுப்பு வந்திடும் சார்!’’ - ஆசிரியர் சொல்லி முடிக்க, உண்மையை உணர்ந்தார் சிவா.