ரொமான்ஸ் நாட்கள்!



ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் ‘தாழி’களெல்லாம் ஓடுகளாக உடைந்து சிதறிக் கிடப்பதைப் பார்த்தால், வரலாற்றின் அருமை தெரியாத நம் வெகுஜன மனங்கள்தான் முன் நிற்கின்றன!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

மூன்று மாணவிகளின் மரணம் பற்றிய ஆய்வு பதற வைத்தது. பணம் கொடுத்தால் எதற்கும் அனுமதி கிடைக்கிற தேசத்தில், இப்படிப்பட்ட அவலங்கள் தொடர்கதையாக விடக் கூடாது!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

பாரதிராஜாவின் பளீர் பதில்கள் அனைத்தும் சுளீர் சுளீர். அவரின் உள்ளக் குமுறல்கள் நியாயமானதே. அதிலும் சிம்பு பற்றிய அவரின் கருத்து கவனத்துக்குரியது!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

விசாகா சிங் நிஜமாகவே ஓர் அழகான ராட்சஸிதான். ‘பயம் ஒரு பயணம்’ படத்தில் அவரைப் பேயாக நடிக்க வைத்த பெருமைக்காக இயக்குநர் மணிஷர்மாவுக்கு வாழ்த்து!
- டி.செல்வகுமார், கோயமுத்தூர்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் தகவல்கள் ஷாக். அது நம் நாட்டில் பரவ வாய்ப்பு இல்லை என்பது ஆறுதல்!
- இரா.கல்யாணி கோபால், புதுச்சேரி.

‘சாகஸம்’ படம் மூலமாக பிரசாந்த் தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வந்து ‘சாகசம்’ செய்யட்டும். படத்தின் நாயகி ‘அமண்டா’வின் போஸே அதைச் சொல்லுதே பாஸ்!
- ஆர்.சூரஜ்குமார்,
காங்கேயம்.

ஒரே ஒரு பெண் பள்ளி செல்வதற்காக ஒரு ரயிலையே தொடர்ந்து இயக்கி வரும் ஜப்பான் அரசின் சேவை வியப்பையும் ஏக்கத்தையும் தந்தது!
- கே.டி.முத்துவேல், கருப்பூர்.

சோளிங்கரில் நடந்தேறிய ரஜினியின் பிரமாண்ட பிறந்த நாள் கொண்டாட்ட கவரேஜ், சுவையும் சுவாரசியமும் மிக்க ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பார்கள். இந்தியாவிலேயே பெரிய நூலகம் ஒன்றைத் துவங்க வேண்டும் என்கிற சேதுராமனின் லட்சியக் கனவை நிறைவேற்றுவது நம் நாட்டுக்கே தேவை!
- இராம.கண்ணன்,
திருநெல்வேலி.

லீனா மணிமேகலை படைத்திருந்த ‘இருபத்தியெட்டு இலைகள்’ கவிதை, அதற்கான படம், இரண்டுமே சூப்பரோ சூப்பர்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆனாலும் இந்த ஆர்யாவுக்கு இப்படி அமைகிறதே அய்யா. ஒரே படத்தில் திவ்யா, பார்வதி, சமந்தா... ‘பெங்களூர் நாட்கள்’ ஷூட்டிங் முழுக்க அவருக்கு ரொமான்ஸ் நாட்கள்தான் போல!
- ராமசாமி, அம்பாசமுத்திரம்.