கவிதைக்காரர்கள் வீதி



*கடற்கரைக் காற்றாய்
உன் வீட்டை
நான் சூழ்ந்து நிற்கிறேன்.
நீ
கொஞ்சம்
ஜன்னலைத் திற.

*நீ
என் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுகிறாய்.
உன் மகன்
ஓடி வருகிறான்.
நான்
உன் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுகிறேன்.
என் மகள்
ஓடி வருகிறாள்.
சேராத காதலெல்லாம்
இப்படித்தான்
பிள்ளைகளாக
வந்து பிறக்கின்றன.

*வாசல் கோலமாய்ப்
படர்ந்து கிடக்கிறது
உன் அழகு.
அதன் நடுவில்
பரங்கிப் பூவாய்ச்
சாய்ந்து கிடக்கிறது
என் மனசு.
uபிறகு
தருவதாகச் சொன்ன
நிறைய முத்தங்கள்
என்னிடம் இருக்கின்றன.
‘‘பரவாயில்லை,
பிறகு தா’’ என்று சொன்ன
நிறைய வார்த்தைகள்
உன்னிடம் இருக்கின்றன.
பிறகுக்குப் பதிலாக
உடனே என்ற வார்த்தை
வாய்த்தாலொழிய
வசப்பட வாய்ப்பில்லை
முத்தங்கள்.

த.கண்ணன்