தத்துவம் மச்சி தத்துவம்



தலைவர் ரவுசு தாங்கலை!’’
‘‘என்ன செய்தார்?’’
‘‘காதலர் தினத்தைக் கொண்டாட ரேஷன்ல விலையில்லா ரோஜா தருவாங்களான்னு கேட்கறாரே!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

அரசியல்வாதி பையன்கிட்ட மாட்டிக்கிட்டேன்டி...’’
‘‘என்ன ஆச்சு?’’
‘‘காதலுக்கு ஓகே சொல்லலேன்னா என் கொடும்பாவியை எரிப்பேன்னு மிரட்டறான்!’’
- பி.ஜி.பி. இசக்கி,
பொட்டல் புதூர்.

இதோ பாரும்மா... உன் பாய் ஃபிரண்ட் இதுவரை எத்தனை பெண்களைக் காதலிச்சு கைவிட்டிருக்கான்னு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமா எல்லாம் தெரிஞ்சுக்க முடியாது...’’
- பர்வீன் யூனுஸ்,
ஈரோடு.

என்னதான் காதலுக்கு ‘கெமிஸ்ட்ரி’ வொர்க் அவுட் ஆகணும்னாலும், அதுக்காக காலேஜ் ‘லேப்’ல உக்காந்து கடலை போட்டா நடக்குமா?
- காலேஜ் காம்பஸுக்குள் கணக்கற்ற காதல் தோல்விகளை சந்தித்தோர் சங்கம்.
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

மினிஸ்டர் மகனை லவ் பண்ணினது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்?’’
‘‘என் படத்தை தன் இதயத்துல ஸ்டிக்கர் ஒட்டி வெச்சிருக்கிறதா சொல்றார்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

காதலர்கள் ஓட்டுகளை அள்ளறதுக்கு தலைவர் வியூகம் வகுக்கறார்...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘இந்தக் காதலர் தினத்தில் இருந்து எங்கள் கட்சியில் காதலர்கள் பாசறை ஏற்படுத்தவுள்ளோம்னு மேடையில் சொன்னாரே!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

அவனுக்கு பெருந்தன்மை ஜாஸ்தின்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘பிரேக் அப் ஆகிப் போன லவ்வர்ஸுக்கும் மறக்காம டாப் அப் பண்ணிட்டிருக்கானே!’’
- பி.ஜி.பி.இசக்கி,
பொட்டல் புதூர்.