பச்சையம்மன் குறித்த கல்வெட்டு‘பச்சையம்மன்’ ஓவியத்தை அட்டையில் தந்த ‘வெங்கி’யின் கைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடணும் என்னமாய் சொக்கி(லயித்து)ப் போனேன் தெரியுமா?
- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.

பக்தர்கள் வழிபட அவர்களுக்குள் எப்படி சக்தி பிறக்கிறது என்பதை பொறுப்பாசிரியர் ‘நலந்தானே’ பகுதியில் தெளிவுபடுத்தியிருப்பது பக்தர்களாகிய எங்களுக்கு புதிய உற்சாகத்தை வழங்கியது. - கே.பிரபாவதி,

மேலகிருஷ்ணன் புதூர்.‘தெளிவு பெறுஓம் பகுதி’யில், என்னதான் நாகரீகம் என்ற கேள்விக்கு திருக்கோவிலூர் ஹரி பிரசாத் சர்மா வழங்கிய நமது தேசத்தின் ஆணி வேரே ஆன்மிகமும் அன்பும்தான் என்ற பதில் அர்த்த புஷ்டியானது. வெல்லும் சொல்லாக இருந்தது. பாராட்டுக்கள் பல சொன்னாலும் ஆன்மிகம் பலன் சொல்லிமாளாது. -  காவிரி புனிதர், அரிமளம். R.தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76.

சிறப்புமிக்க ஆடி மாதத்தில் சக்தியை ஏன் வழிபட வேண்டும். சக்தி எங்கெங்கு உறைந்து அருளாசியை வாரி வழங்குகிறாள் என்பதை எல்லாம் ‘நலந்தானா’வில் கூறியிருந்தது மெய்சிலிர்க்க வைத்தது ஆடி என்பதே அம்மனுக்கான மாதம், அம்மாதம் முழுவதுமே அம்மனை வணங்கி நம்மனதிலுள்ள கர்வத்தை விலக்க வேண்டும் என்பதை சக்தி பிரவாகம் மூலம் அறிந்தது மனதில் மகிழ்ச்சி பிரவாகத்தை ஏற்படுத்தியது. - மு.மதிவாணன்,  அச்சல்வாடி அஞ்சல், அரூர்.

படைப்பாற்றல் எனும் பச்சை வண்ணத்தாள் எனும் தலைப்பில் பச்சையம்மன் மகத்துவங்களை விவரித்த கட்டுரை பச்சையம்மன் பக்தி ஸ்பெஷலுக்கு மரகத மகுடமாய் ஜொலித்தது. - அயன்புரம்.த.சத்திய நாராயணன்,

விண்ணிலே போர் புரிந்த இடமாக விளங்கும் திருப்போரூர் குறித்த ஆன்மிக அற்புதங்கள் அறிந்துகொண்டோம். வள்ளலார் ஓடை எனும் சரவணப் பொய்கையின் புனிதத்தன்மையும் அறிய முடிந்தது.- ராம.கண்ணன், சாந்திநகர், திருநெல்வேலி-2

வேறெங்கும் அறிந்திராத வகையில் பச்சையம்மனின் தோழியர் என்ற ஒரு தொகுப்பு தந்து மனதை ஆனந்த பூந்தோப்பு ஆக்கி விட்டீர்கள். எட்டு பக்கத்தொகுப்பும், படங்களும் திருப்தி தரும் திருப்பதி லட்டுதானுங்க!
- ஆர்.ஜி.பாலன், திசையன்விளை-627657.

பச்சையம்மன் ஸ்பெஷல் ஆன்மிகம் அட்டைப்படம் அம்மன் அருள்பாலித்தது சக்தி பிரவாகம் கட்டுரை சக்தியின் வடிவமாய் வாழ்க்கைக்கு ஒளி தந்தது பச்சையம்மன். ராயபுரத்தின் ஆலயம் கட்டுரை படித்தேன். பரவசம் அடைந்தேன், ‘தெளிவு பெறு ஓம்’, மனதை தெளிவுபடுத்தியது பச்சையம்மன் ஸ்பெஷல் ஆன்மிக  கூழ் வார்த்தது. பச்சை மகரத கற்களாய் ஆன்மிக பலன் மின்னியது ஆன்மிக பலன் பக்தர்களுக்கு.
- தமிழன்புடன் வைரமுத்து பார்வதி, ராயபுரம், சென்னை-13

பச்சையம்மன் என்பவர் யார் என்பது புரியாமலும் தெரியாமலும் இருந்து வரும் பல பக்தர்களுக்கு நமது ஆன்மிக இதழ் மிகத்தெளிவாகவும், அருமையாகவும் ஒரு பசுமைத் தகவலாகவும் அளித்து இருப்பது ஆனந்தமாக உள்ளது.
- ப.மூர்த்தி, பெங்களூரு-97.