பிரசாதங்கள்



சந்திரலேகா ராமமூர்த்தி

கலவை சுண்டல்

என்னென்ன தேவை: கறுப்பு கொண்டைக்கடலை, வெள்ளை மொச்சை, ராஜ்மா பீன்ஸ் தலா -  கப், வெள்ளை காராமணி, பச்சைப்பயறு, பச்சைப்பட்டாணி தலா  கப், கறுப்பு காராமணி -  கப், மற்ற பயறுகள் விருப்பத்திற்கு ஏற்ப.தாளிப்பதற்கு: கடுகு, காய்ந்த மிளகாய், எண்ணெய், துருவிய தேங்காய், உப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்.


எப்படிச் செய்வது: அதிகம் கெட்டியாக இருக்கிற பருப்புகளை 8 மணி நேரம் ஊறவைக்கவும். பச்சைப் பயறு, பச்சைப் பட்டாணி, வெள்ளை காராமணி, கறுப்பு காராமணியை 6 மணி நேரம் ஊறவைக்கவும். எல்லாவற்றையும் உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து தாளித்து தேங்காய்த் துருவல் சேர்த்து பிரசாதங்களாக வைத்த பின் பரிமாறவும். கோயில்களிலும் இதை பிரசாதமாக மார்கழி மாதத்தில் கொடுப்பார்கள். குறிப்பு: கடலைப்பருப்பு, தனியா, சீரகம் தலா 1 ஸ்பூன் வறுத்து பொடித்து தூவலாம்.

நெல் பொரி உருண்டை


என்னென்ன தேவை: நெல் பொரி - 4 கப், பொடித்த வெல்லம் - 1 கப், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது: நெல் பொரியில் மேலிருக்கும் உமியை நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெல்லத்தை பொடித்து கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு கரைத்து வடித்துக்
கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்கவும். வெல்லப் பாகு உருட்டும் பதம் வந்ததும் இறக்கி பொரியை கொட்டி நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: ஒரு கப் வெல்லத்துக்கு எப்போதுமே கால் கப் தண்ணீர்தான் அளவு. நெய் சேர்ப்பதால் உருண்டை பளபளப்பாக இருக்கும்.

கோயில் சர்க்கரைப் பொங்கல்


என்னென்ன தேவை: பச்சரிசி - 1 கப், வெல்லம் - 2 கப்,
பயத்தம் பருப்பு -  கப், ஏலக்காய்த்தூள் - சிறிது. முந்திரி, திராட்சை
தலா - 10, 15, நெய் -  கப், பச்சைக் கற்பூரம் - சிறிது.
எப்படிச் செய்வது: பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் அரிசியை சேர்த்து கலந்து குழைய பொங்கலாக தேவையான தண்ணீருடன் வேக வைத்துக்கொள்ளவும். வெந்ததும் சுத்தமான பொடித்த வெல்லத்தை கரைத்து வடித்து சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து சுருண்டு வந்ததும் (பொங்கல் பதம்) நெய்யை சூடு செய்து முந்திரி, திராட்சை வறுத்து நெய்யுடன் சேர்த்து கிளறி படைத்து பரிமாறவும். சுடச் சுட கோயில் பொங்கல் ரெடி. மார்கழிப் பொங்கல்.

தொகுப்பு: ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்