டியர் டாக்டர்எல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து வைட்டமின் N என்ற கவர் ஸ்டோரி, ABCDEK என்ற வைட்டமின்களை இதுகாறும் அறிந்து வைத்திருப்பவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்திருந்தது. இயற்கையிடம் எல்லாமே இருக்கிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல் வைட்டமின் N புரிய வைத்தது காலத்தின் கட்டாயம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
 
வைட்டமின் பற்றி N-ன்ன மாதிரியான தத்ரூபமான ஒளிமிக்க அட்டைப்படம்! இயற்கை அழகு கொஞ்சிய அட்டைப்படத்தில் சொக்கிப் போனேன். அருமையான லே அவுட்... உயிர்ச்சத்து மிக்க கவர் ஸ்டோரி. Earth Therapy-யும் அதில் இணைந்திருந்தது இன்னமும் சிறப்பு. ஹீரோவே எதிரியானால் சமாளிக்க எப்படிப்பட்ட சிகிச்சை தேவை என்பதனை படித்தபோது வியந்து போனேன். உடல் உருவம் பற்றிய மனநலம் எப்படி எல்லாம் பாதிப்பை தந்து வாட்டுகிறது என்பதனை அறிந்த போது அதிர்ச்சியாகவே இருந்தது.
- சுகந்தி நாராயன், வியாசர் நகர்.

கர்ப்பிணிகளுக்கான சிறப்பு உடற்பயிற்சி வகுப்புகள் பற்றி தகவல்கள் மிகுந்த உதவியாக இருந்தது. Body Dysmorphic Disorder என்று உடல் உருவம் பற்றிய உளவியல் கட்டுரையும், மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய உளவியல் சார்ந்த கட்டுரையில் சொல்லியிருந்த தகவல்களும் சிறப்பு.
- அன்பு, பாளையங்கோட்டை.

அங்காயப் பொடி பற்றிய மருத்துவ தகவல்களும், Omega 3 கொழுப்பு அமிலத்தின் பயன்கள் பற்றிய கட்டுரையும் அருமை. நிச்சயமாக புற்றுநோயை வெல்லலாம்! வலிப்பு நோயை வெல்ல முடியும்! என்கிற கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றாற்போல, அதை படித்த பிறகு நோய் குணமானது போல் நம்பிக்கையும், ஆறுதலும் ஏற்படுகிறது.
- லெட்சுமி, நெல்லை.

குழந்தையின் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அம்மாக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் அருமை. அமிர்தத்துக்கு இணையான வல்லாரையின் மருத்துவ தகவல்களும், மூலிகைத் தோட்டம் பற்றிய கட்டுரையில் உள்ள மருத்துவ குணமுடைய தாவரங்களின் அணிவகுப்பும் ஆச்சரியப்பட வைத்தது.
- முத்து, மதுரை.