இளம் தலைமுறையினரின் அழகு பிரச்னை!சிகிச்சை

‘‘இன்று இளையதலைமுறையினரின் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது. ஏனென்றால் அவர்கள் வசதி, வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கைச்சூழலில் இருப்பதாக நினைத்துக்கொண்டு உடல் உழைப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஸ்மார்ட் போன் போன்ற தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.

மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய, காற்று, நீர் மற்றும் ஒலி மாசு என அனைத்தும் அதிகளவில் உள்ளது. அடுத்து தினமும் நாம் உட்கொள்கிற உணவுப்பண்டங்கள், காய்கறிகள் தரம் இல்லாதவையாய் உள்ளன. இவை நம்முடைய உடலில், பிரதிபலிக்கும்போது பல அழகு சார்ந்த பிரச்னைகள் ஆரம்பிக்கிறது’’ என்கிறார் முகம், தாடை குறியியல் மற்றும் அழகியல் நிபுணரான ராஜசேகர்.

‘‘இளைய தலைமுறையினர் நள்ளிரவு வரை வேலை செய்தல், படம் பார்த்தல் என நேரத்தைச் செலவிடுவதால் 12 மணிக்கு மேல் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும் சத்தான உணவு வகைகளைச் சாப்பிடாத காரணத்தால் இளம்வயதிலேயே முடி உதிர்தல் ஆரம்பித்து விடுகிறது.

எனவே ஆண்களும், பெண்களும் அதிக மன அழுத்ததிற்கு உள்ளாகின்றனர். இதனால் நிறைய ஆண்களுக்குத் திருமணம் தடைபடுகிறது. எனவே இதிலிருந்து விடுபட ஆன்லைன் மூலம் விற்கப்படும் அழகு சாதனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலம் விற்கப்படும் அழகு சாதனங்கள் இல்லாமல் சிகிச்சை தர முடியும். மேலும் இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வும் கொடுக்க முடியும். அதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இன்று உள்ளன.

முடி உதிர்தல் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்யலாம். புதிதாக நடும் முடியை வெட்டலாம். மொட்டை அடிக்கலாம். அது மீண்டும் வளரும். இதேபோல் முடி கொட்டும் பிரச்னை உள்ளவர்களுக்குத் தரமான சிகிச்சை இருக்கிறது. அவர்களுடைய ரத்தத்தை எடுத்து, அதில் இருந்து ஹார்மோனைப் பிரித்து, அவர்கள் தலையின் உள்ளே செலுத்தும்போது அடிபட்ட முடியின் வேர்கள் பலமாகி, திரும்பவும் முடி வளரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. இதை PRP டிரீட்மென்ட் என்போம். மருத்துவ உலகில் இதை Golden Liquid என்கிறார்கள்.

PRP டிரீட்மென்ட் மூலம் எலும்பு முறிவையும் சரி செய்யலாம். 6 வாரங்களில் குணமாகக்கூடிய எலும்பு முறிவை 4 வாரங்களில் குணப்படுத்தலாம்.
முன்பெல்லாம் ஒன்றிரண்டு பருக்கள்தான் முகத்தில் ஏற்பட்டதைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது முகத்தில் நிறைய பருக்கள் ஏற்படுகின்றன. அவற்றின் அளவும் பெரிதாக உள்ளது.

மேலும் சீழ் கோர்த்தும் காணப்படுகிறது. தரமற்ற அழகு சாதனங்கள், எண்ணெய் நிறைந்த உணவுகள் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம். பெண்கள் எண்ணெய் அதிகம் உள்ள பண்டங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பருக்கள் மறைந்தாலும், வடுக்கள் அப்படியே இருந்து விடுகின்றன. இதற்கு சிகிச்சை பெற, யாரிடம் செல்வது என்பதும் அவர்களுக்கு தெரிவது இல்லை.

ஒரு சில இடங்களில் முகப்பரு பிரச்னைக்கு லேசர் சிகிச்சை தருகிறார்கள். அதிலும் 50 சதவிகிதம்தான் பலன் கிடைக்கிறது. நல்ல ரிசல்ட் வேண்டுமானால் சிறந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும். முக்கியமாக வெளியே கிடைக்கும் க்ரீம், ஆயில் வாங்கி சுய மருத்துவம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும் ஆயின்ட்மென்ட் முகப்பருவைப் போக்கும். ஆனால்,
அவ்விடம் கறுத்துவிடும்.

அடுத்து இளைய தலைமுறையினருக்கு இளம் வயதிலேயே முதுமைத்தோற்றம் அடைதல் பெரிய பிரச்னையாக உள்ளது. முகத்தில் உள்ள கொழுப்பு சரியான அளவில் இருந்தால்தான் இளமைத் தோற்றம் இருக்கும். வயதாக வயதாக கண்களில் உள்ள கொழுப்பு கீழே இறங்கி முகம் தொங்க ஆரம்பிக்கும். முன்பெல்லாம் 50 வயதுக்குப் பிறகுதான் இவ்வாறு நடைபெறும். தற்போது 25 வயதிலேயே இப்படி நடப்பதைப் பார்க்கிறோம்.

எல்லோர் மனதிலும் நம்முடைய தோற்றத்தில் உள்ள குறையைச் சரி பண்ண முடியுமா என்ற எண்ணம் இருக்கும். மேலும் நிறைய செலவாகுமே என்ற நினைப்பும் இருக்கும். இந்த எண்ணமெல்லாம் தற்போது தேவையில்லை. சிறப்பான சிகிச்சையை, எளிய கட்டணத்திலேயே செய்ய முடியும். உடலழகு தொடர்பான சிகிச்சையை ஆரம்பிக்கும் முன் லைஃப்ஸ்டைலை மாற்றுவது முக்கியம். அப்போதுதான் பலன் கிடைக்கும். அதற்கான கவுன்சிலிங்கை முதலில் தர வேண்டும்.

ஒரு நபருக்கு என்ன மாதிரியான சிகிச்சை தந்தால், அவர் தோற்றத்தை இன்னும் மெருகேற்ற முடியும் என்ற நிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும். பற்கள், சிரிக்கும் விதம், முகச்சுருக்கம் போன்றவற்றை ஒரு முறையிலேயே சரி செய்ய முடியும். இதற்கான நவீன மருத்துவ உபகரணங்கள் எங்களிடம் உள்ளன. மூக்கை சர்ஜரி இல்லாமலேயே சரி செய்யலாம். அது பிடிக்கவில்லை என்றால் மூக்கின் அமைப்பை மீண்டும் மாற்றிக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் இம்முறையில் உதடு அமைப்பையும் மாற்றலாம்.

இம்முறையில் கண்களின் கீழே ஏற்படும் கருவளையத்தையும் குணப்படுத்தலாம். ஆண்களுக்குக் கீழ்த்தாடை சரியாக இருக்காது. சர்ஜிக்கல், நான்-சர்ஜிக்கல் முறையில் அதையும் சரி செய்யலாம்’’ என்கிற டாக்டர் ராஜசேகரிடம் சிகிச்சை பெற விரும்புகிறவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் Dr.Rajasekar’S Cosmetics & Dentalcentre மருத்துவமனையை 98411 94405, 91766 31625 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- விஜயகுமார்