காலணி வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம்!



அட்மிஷன்

காலணி வடிவமைப்புத் துறையில் நவீன தொழிநுட்பத்துடன்கூடிய பல்வேறு படிப்புகளை வழங்கும் பொருட்டு 1957ம் ஆண்டு சென்னை, கிண்டியில் தொடங்கப்பட்டதுதான் Central Footwear Training Institute (CFTI). இந்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவன அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவருகிறது இந்நிறுவனம்.

லண்டனில் இயங்கிவரும் லீசெஸ்டர் கல்விநிறுவனத்துடன் இணைந்து பல்வேறு டிப்ளோமா, முதுநிலை டிப்ளோமா, குறுகியகால மற்றும் சான்றிதழ் படிப்புகளை உலக தரத்தில் வழங்கிவருகிறது இக்கல்விநிறுவனம். இதில் 2019-20 கல்வி ஆண்டுக்கான பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: இரண்டு வருட கால அளவிலான Diploma in Footwear Manufacture & Design (DFMD), 18 மாதங்கள் கால அளவிலான Post-Graduate Higher Diploma in Footwear Technology & Management Studies (PGHD),  18 மாதங்கள் கால அளவிலான Post-Graduate Diploma in Footwear Technology (PGDFT), ஒரு வருட கால அளவிலான Post Diploma in Footwear Technology (PDFT), ஒரு வருட கால அளவிலான Advanced Certification in Footwear Design & Product Development (FDPD), ஒரு வருட கால அளவிலான Advanced Certificate Course in Footwear Manufacturing Technology (FMT),  ஒரு வருட கால அளவிலான Leather Goods Maker (LGM), ஆறுமாத கால அளவிலான Condensed Course in Footwear Design & Production (CFDP) மற்றும் மூன்று மாத கால அளவிலான Certificate in Shoe Computer Aided Design (CSCAD) போன்ற ஒன்பது படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி: பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருப்பதால் படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறு
படுகிறது. நிறுவனத்தின் www.cftichennai.in  என்ற இணையதளத்தில் சென்று கல்வித் தகுதி விவரங்களை விவரமாக காணலாம்.
வயதுவரம்பு: Diploma in Footwear Manufacture & Design (DFMD) படிப்பிற்கு 17 முதல் 25 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். Certificate in Shoe Computer Aided Design (CSCAD) படிப்பிற்கு வயது வரம்பு கிடையாது. மற்ற அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cftichennai.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. Post-Graduate Diploma in Footwear Technology (PGDFT), அளவிலான Advanced Certification in Footwear Design & Product Development (FDPD) மற்றும் Condensed Course in Footwear Design & Production (CFDP) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் கடைசி வாரம் ஆகும்.மேலதிக தகவல்களுக்கு www.cftichennai.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா