சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி! 320 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடன், கடனற்ற சங்கங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 320 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாத ஊதியம் ரூ.5,000 முதல் ரூ.47,600 வரை. இதற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி

*எதாவது ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
*பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின்போது தமிழ்மொழியை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி
*அடிப்படைக் கணினி அறிவு

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.chndrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 25.09.2019.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணத்தை சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம்
அல்லது கிளைகளில் செலுத்தி, அதற்கான விண்ணப்ப ரசீதை பெற்று அதிலுள்ள ‘JOURNAL ID’ எண்ணை தங்கள் விண்ணப்பப்
பதிவில் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு, ரசீதையும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் ‘STATE BANK OF INDIA’ இணையதளத்தில் உள்ள ‘SBI COLLECT’ என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

தேர்வு முறை

1.விண்ணப்பப் பரிசீலனை
2.எழுத்துத் தேர்வு
3.நேர்முகத் தேர்வு

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இடஒதுக்கீடு மற்றும் இனச் சுழற்சி முறை பின்பற்றப்பட்டு பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.

(இதேபோன்று வேறு சில கூட்டுறவு வங்கிகளிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த வகையில் விருதுநகர் வங்கிக்கு 17.9.2019, கிருஷ்ணகிரி வங்கிக்கு 20.9.2019, வேலூர், மதுரை வங்கிகளுக்கு 30.9.2019, பெரம்பலூர் வங்கிக்கு 23.9.2019, திருச்சி வங்கிக்கு 5.10.2019 ஆகிய தேதிகள் விண்ணப்பிக்க கடைசி தேதிகளாகும்)மேலும் முழு விவரங்களை அறிய http://www.chndrb.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்