செம்மையான செயல்!வாசகர் கடிதம்

அடேங்கப்பா கைகுலுக்குவதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? மனிதர்களின் மனநிலையை உடல் மொழி பிரதி
பலிப்பதையும், உலகம் முழுவதும் கைகுலுக்குவதன் அர்த்தம் எப்படி பார்க்கப்படுகிறது என்பதையெல்லாம் தெளிவுபடுத்து
கிறது நடை… உடை… பாவனை என்ற தொடர் கட்டுரை. உடல்மொழி பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளன.
  -எஸ்.பரிமளா, வடநெமிலி, சென்னை.
 
தகுதித் தேர்வின் பயன், தேர்வுத் தாள்கள், கல்வித் தகுதி,விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் என GATE 2020 நுழைவுத் தேர்வு பற்றிய கட்டுரை விரிவாகவும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் இருந்தது. அதேபோல் CTET தகுதித் தேர்வு பற்றிய கட்டுரையும் முழுமையாகவும் தெளிவாகவும் இருந்தது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!
  -இரா.வடிவேலன், மதுரை.
 
பழங்குடி மாணவர்களை அடிப்படைக் கல்வி கற்க தூண்டிய தலைமை ஆசிரியர் பரமேசுவரி, 8% முதல் 10% என இருந்த மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை 75% மாற்றிய புருஷோத்தமன், அரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர் பிரபு தாஸ் மற்றும் அரசுப் பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் குணசேகரன் என ஆசிரியர் தினத்தைச் சிறப்பிக்கும் விதமான கட்டுரைகள் அருமை. அரசுப் பள்ளியை மேம்படுத்திய
நல்லாசிரியர்களை ஆசிரியர் தினத்தில் அறிமுகப்படுத்தியது கல்வி-வேலை வழிகாட்டியின் செம்மையான செயல்.
  -இரா.தீனதயாளன், ஈரோடு.
 
கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளிகளில் அறிவியல் மையம் அமைத்துக் கொடுக்கும் அகஸ்தியா அறக்கட்டளையின் செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை. வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி படிக்க வழிவகை செய்யும் இதுபோன்ற செயல்பாடுகள்தான் மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவும்.
  -ஆர்.ஜெஸ்ஸி, வேளாங்கண்ணி.