வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

ஏர் இண்டியாவில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் வேலை!

நிறுவனம்: ஏர் இண்டியாவின் கீழ் இயங்கும் நிறுவனமான ஏர் இண்டியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் எனும் துணை நிறுவனத்தில் வேலை
வேலை: அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர்
காலியிடங்கள்: மொத்தம் 170. இதில் தென் பிராந்தியத்துக்கான காலியிடம் 25
கல்வித் தகுதி: டிகிரி, பி.இ., மற்றும் பி.டெக் படிப்பில் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவு 33, ஓ.பி.சி 36 மற்றும் எஸ்.சி/எஸ்.டி 38 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

தமிழக அரசு சுகாதாரத் துறையில் மருந்தாளுநர் பணி

நிறுவனம்: தமிழக அரசின் சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்தகங்களில் மருந்தாளுநர் வேலை
வேலை: டிஸ்பன்சர் எனும் மருந்தாளுநர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 405
கல்வித் தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துவத் துறைகளில் ஃபார்மசி டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 18 முதல் 57
தேர்வு முறை: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலை வகுப்புத் தேர்ச்சி மற்றும் டிப்ளமோ படிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் இந்த வேலைகள் வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.tnhealth.org

விவசாய அறிவியலாளர்கள் தேர்வாணையத்தில் அதிகாரி பணி!

நிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.பி எனப்படும் மத்திய அரசின் விவசாயத்துறை தொடர்பான பணியாளர்களின் தேர்வாணையத்தின் விவசாய அறிவியலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: டைரக்டர், டெப்யூட்டி டைரக்டர் போன்ற உயர் அதிகாரிகளுக்கான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 72. இதில் டைரக்டர் வேலையில் மட்டுமே 40 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: பிஎச்.டி
வயது வரம்பு: 60க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.asrb.org.in

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: டெவலப்பர், நெட் ஒர்க் எஞ்சினியர், ப்ராஜக்ட் மேனேஜர் உட்பட 35 துறைகளில் ஸ்பெஷல் கேடர் ஆபிசர் பதவியில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 477
கல்வித் தகுதி: எஞ்சினியரிங், எம்.எஸ்சி மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். வேலை அனுபவமும் முக்கியம்
வயது வரம்பு: 30 முதல் 40 வரை
தேர்வு முறை; எழுத்து, நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.sbi.con.in

மத்திய அரசின் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் வேலை

நிறுவனம்: சி.ஏ.ஜி எனப்படும் கண்ட்ரோலர் ஆடிட்டர் ஜெனரல்(கணக்குத் தணிக்கையாளர் துறை), புது டெல்லி
வேலை: ஆடிட்டர்(அக்கவுண்ட்ஸ்) மற்றும் கிளர்க். இந்த வேலைகள் ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் வழங்கப்படுகிறது
காலியிடங்கள்: மொத்தம் 182. கிரிக்கட், ஃபுட்பால் மற்றும் ஹாக்கி விளையாட்டில் தேர்ச்சியான
ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
பேட்மின்டன் மற்றும் டேபிஸ் டென்னிஸ் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: ஏதாவது டிகிரி. விளையாட்டுகளில் மாநிலம் அல்லது தேசிய அளவில் தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வு முறை: உடல் திறன் மற்றும் விளையாட்டுத் திறன் தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.cag.gov.in

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ப்ராஜக்ட் அசிஸ்டெண்ட் பணி!

நிறுவனம்: கேரள மாநிலம் கொச்சினில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான கொச்சின் ஷிப்யார்ட் எனும் கப்பல் கட்டும் துறையில் வேலை
வேலை: ப்ராஜக்ட் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: மொத்தம் 89. இதில் மெக்கானிக்கல் 50, எலக்ட்ரிக்கல் 11, எலக்ட்ரானிக்ஸ் 14, சிவில் 2, இன்ஸ்ட்ருமென்டேஷன் 10 மற்றும் லேபரட்டரி 2 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: 10வது படிப்புடன் மேற்குறிப்பிட்ட துறைகளில் டிப்ளமோ படிப்பு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.cochinshipyard.com

எல்லைச் சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: பார்டர் ரோட் ஆர்கனைசேஷன் எனும் மத்திய அரசின் எல்லை சாலை மேம்பாடு தொடர்பான நிறுவனம்
வேலை: டிராஃப்ட்ஸ்மேன், இந்தி டிரான்ஸ்லேட்டர், ஸ்டோர் சூப்பர்வைசர் உட்பட 8 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 337. இதில் டிராஃப்ட்ஸ்மேன் வேலையிலும் எம்.டி.எஸ் மேசன் வேலையிலும் தலா 215 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது
கல்வித் தகுதி: டிராஃப்ட்ஸ்மேன் வேலைக்கு அறிவியல் பாடங்களை எடுத்து +2 படிப்புடன் கட்டடக் கலை தொடர்பாகச் சான்றிதழ் படிப்பு. மேசன் வேலைக்கு 10வது படிப்புடன் பில்டிங் கட்டுமானத் தொடர்பான சான்றிதழ் படிப்பு
வயது வரம்பு: எம்.டி.எஸ் வேலைகளுக்கு 18 முதல் 25 வரைக்கும் மற்ற வேலைகளுக்கு 18 முதல் 27 வரைக்கும் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்ச்சி மற்றும் ப்ராக்டிக்கல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.bro.gov.in

கனிமவளக் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: மினரல் எக்ஸ்ப்ளரோஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்(mecl) எனும் மத்திய அரசின் கனிமவளக் கண்டுபிடிப்புகளுக்கான நிறுவனத்தில் வேலை
வேலை: ஃபோர்மேன், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உட்பட 26 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 256
கல்வித் தகுதி: 10வது, டிகிரி, பி.ஜி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பி.ஏ, பி.காம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.டெக், சி.ஏ. போன்ற ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் பொருத்தமானதற்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 30 முதல் 50 வரை
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.mecl.co.in

 தொகுப்பு: டி.ரஞ்சித்