அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?மொழி

Spot the Error -9

The Articles -2

ஆங்கில மொழிப் பயிற்சிக்கான இந்தப் பகுதியில் சில கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக ஆங்கிலமொழியை கையாளும் விதத்தை வழங்கிவந்தோம். கடந்த சில இதழ்களில் பயிற்சிப் பகுதியாக வழங்கி வருகிறோம்.

FILL IN THE BLANKS WITH SUITABLE   ARTICLES
1._______ umbrella is _____ useful thing.   
2.______ English defeated _____ French.
3.I bought ___ cow  and _____ ox.      
4.______ Andamans are ____ group of islands.
5.I spent ___ hour in ___ hotel.
6.He is ____ European but his wife is ___ Indian.
7.It is ____ honour.
8.____ Punjab is ___ border state.
9.I saw __ man yesterday.
10.He is ____ man who I saw yesterday.

KEY

1. The umbrella is a useful thing. ( an என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அம்ப்ரெல்லா என்பது  ‘‘குடை” என்ற இனத்தையே குறித்து வந்துள்ளது. ஒரு குடை  யூஸ்ஃபுல் திங்க் என்றால் மற்ற குடைகள் எல்லாம் யூஸ்ஃபுல் திங்க்ஸ் இல்லையா? என்ற கேள்வி வரும். எனவே ‘the’ என்பது தான் சரியானது)
2.The English defeated the French. (English என்பது மொழியைக் குறிக்கும். the English என்பது ஆங்கிலேயர்களைக் குறிக்கும். எனவே The English, the French என்பதுதான் சரியான பதில்)
3.I bought a cow and an ox.
4.The Andamans are a group of islands.
5.I spent an hour in a hotel.             
6.He is a European but his wife is an Indian. European என்ற வார்த்தையில் ‘E’ என்பது சைலண்ட். அதற்கு உச்சரிப்பு கிடையாது. மேலும் அதற்கு அடுத்து வரக்கூடிய ‘u’ என்ற (vowel) உயிரெழுத்து வந்தாலுமே அதனுடைய உச்சரிப்பு “யு” என்ற (consonant) உயிர்மெய் ஒலியாக ஒலிப்பதால் அதற்கு  ‘a’ என்ற article தான் சரியான பதிலாகும்.)
7.It is an honour. (honour என்ற இந்த வார்த்தையில்  ‘h’ என்ற consonant  முதலெழுத்தாக வந்தாலும், அதற்கு ஒலி இல்லை. எனவே ‘ஆனர்’ என்றுதான் சொல்ல முடியும். ‘ஆ’ என்ற வௌவுல் ஒலி வருவதால் ‘an’ என்ற articleதான் இங்கு வரும் .
8.The Punjab is a border state. (பஞ்சாப் என்ற மாநிலத்தின் பெயருக்கு மட்டும் “த’’ என்ற ஆர்டிக்களை போட வேண்டும் என்பது விதி.)
9.I saw a man yesterday. (நேத்து நான் ஒரு ஆளைப் பார்த்தேன்.)
10.He is the man who I saw yesterday. (நான் நேற்று பார்த்தது அந்த ஆளைத்தான்.)

(மீண்டும் பேசலாம்)

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்