வேலை ரெடி!
வாய்ப்புகள்
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...
எஞ்சினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! நிறுவனம்: மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் வேலை: ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் காலியிடங்கள்: மொத்தம் 370 . ஜூனியர் ஓவர்மேன் - 149, மைனிங் சர்தார் - 201, டெபுடி சர்வேயர் - 20. கல்வித் தகுதி: மைன் எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பு மற்றும் மைனிங் சர்தார், மைன் சர்வேயர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும் வயது வரம்பு: 21-33 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.1.2019 மேலதிக தகவல்களுக்கு: www.mahanadicoal.in
தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி!
நிறுவனம்: மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய வன உயிரியல் பூங்காக்கள், புதுடெல்லி வேலை: ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும் டிக்கெட் கலெக்டர், பூங்கா காவலர், பூங்கா வழிநடத்துநர், அட்டன்டன்ட், கேங்மேன், பியூன் உள்ளிட்ட மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி காலியிடங்கள்: மொத்தம்180 கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள் வயது வரம்பு: 18-25 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.1.2019 மேலதிக தகவல்களுக்கு: www.envfor.nic.in
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பயிற்சிப் பணி! நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் சுருக்கமாக பி.எஸ்.என்.எல். என அழைக்கப்படும் பொதுத்துறை தொலைத் தொடர்புநிறுவனம். வேலை: மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ) காலியிடங்கள்: மொத்தம்150. இட ஒதுக்கீடு அடிப் படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவர்கள். சில பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு உண்டு. விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.1.2019 மேலதிக தகவல்களுக்கு: www.bsnl.co.in
எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு H.P.C.L-ல் அதிகாரி பணி! நிறுவனம்: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வேலை: அதிகாரி பணி. மெக்கானிக்கல், சிவில் மற்றும் கெமிக்கல் எஞ்சினியரிங் பிரிவுகள் காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற 4 வருட எஞ்சினியரிங் படிப்பை மேற்கண்ட பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கேட் தேர்வில் தேர்ச்சியும், மதிப்பெண் களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வயது வரம்பு: 25 வயதுக்குள் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.2019 மேலதிக தகவல்களுக்கு: http://hindustanpetroleum.com/hpcareers/current_opening
ரிசர்வ் வங்கியில் மேற்பார்வை மேலாளர் பணி!
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி வேலை: மேற்பார்வை மேலாளர் துறையில் பல உட்பிரிவுகள் உள்ளன காலியிடங்கள்: மொத்தம் 61 கல்வித் தகுதி: பல்வேறு உட்பிரிவுகளுக்கு ஏற்ற கல்வித் தகுதிகளை இணையத்தில் பார்க்கவும். வயது வரம்பு: 25-35 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.1.2019 மேலதிக தகவல்களுக்கு: www.rbi.org.in
தொகுப்பு: முத்து
|