வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு
அறிவிப்புகள் இங்கே...

எஞ்சினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை!
 
நிறுவனம்: மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனமான மகாநதி
கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
வேலை: ‌ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர்
காலியிடங்கள்:  மொத்தம் 370 . ஜூ‌னியர் ஓவர்மேன் - 149, மைனிங் சர்தார் - 201, டெபுடி சர்வேயர் - 20.
கல்வித் தகுதி: மைன் எஞ்சினியரிங்
டிப்ளமோ படிப்பு மற்றும் மைனிங் சர்தார், மைன்
சர்வேயர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்
வயது வரம்பு: 21-33
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.1.2019
மேலதிக தகவல்களுக்கு: www.mahanadicoal.in

தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி!

நிறுவனம்: மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய வன உயிரியல் பூங்காக்கள், புதுடெல்லி
வேலை: ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும்
டிக்கெட் கலெக்டர், பூங்கா காவலர், பூங்கா வழிநடத்துநர், அட்டன்டன்ட், கேங்மேன், பியூன் உள்ளிட்ட  மல்டி டாஸ்கிங்  ஊழியர் பணி
காலியிடங்கள்: மொத்தம்180
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள்
வயது வரம்பு: 18-25
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.1.2019
மேலதிக தகவல்களுக்கு: www.envfor.nic.in

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பயிற்சிப் பணி!
 
நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் சுருக்கமாக பி.எஸ்.என்.எல். என அழைக்கப்படும் பொதுத்துறை தொலைத் தொடர்புநிறுவனம்.
வேலை: மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் )
காலியிடங்கள்: மொத்தம்150. இட ஒதுக்கீடு அடிப்
படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவர்கள். சில பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.1.2019
மேலதிக தகவல்களுக்கு: www.bsnl.co.in

எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு H.P.C.L-ல் அதிகாரி பணி!
 
நிறுவனம்: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
வேலை: அதிகாரி பணி. மெக்கானிக்கல், சிவில் மற்றும் கெமிக்கல் எஞ்சினியரிங் பிரிவுகள்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற 4 வருட எஞ்சினியரிங் படிப்பை மேற்கண்ட பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கேட் தேர்வில் தேர்ச்சியும், மதிப்பெண்
களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வயது வரம்பு: 25 வயதுக்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.2019
மேலதிக தகவல்களுக்கு: http://hindustanpetroleum.com/hpcareers/current_opening

ரிசர்வ் வங்கியில் மேற்பார்வை மேலாளர் பணி!

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
வேலை: மேற்பார்வை மேலாளர் துறையில் பல உட்பிரிவுகள் உள்ளன
காலியிடங்கள்: மொத்தம் 61
கல்வித் தகுதி: பல்வேறு உட்பிரிவுகளுக்கு ஏற்ற கல்வித் தகுதிகளை இணையத்தில் பார்க்கவும்.
வயது வரம்பு: 25-35
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.1.2019
மேலதிக தகவல்களுக்கு: www.rbi.org.in

தொகுப்பு: முத்து