விளையாட்டு வீரர்களுக்கு CRPF-ல் வேலை!வாய்ப்பு

330 பேருக்கு வாய்ப்பு!


சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் சி.ஆர்.பி.எஃப் என்பது மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் பிரதானமான ஒன்றாகும். இந்தப் படையின் துவக்கம் என்பது இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே இருந்தபோதும், 1949 ஆம் ஆண்டிலேயே முறையான வடிவம் கொடுக்கப்பட்டது. தற்போது 60 ஆண்டுகளைக் கடந்து இந்தியாவின் உள்நாட்டு அமைதிக்கு முக்கிய காரணமாக திகழும் இந்தப் படை தேர்தல், போராட்டங்கள் போன்ற சமயங்களில் மிக முக்கிய கடமையை ஆற்றிவருகிறது. தற்போது இதில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனங்களை செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பிரிவுகள்: ஹாக்கியில் 15, கால்பந்தில் ஆண்களுக்கு 9, மகளிருக்கு 2, ரோவிங்கில் ஆண்களுக்கு 15, மகளிருக்கு 2, கபடியில் ஆண்களுக்கு 15, மகளிருக்கு 2, வில்வித்தையில் ஆண்களுக்கு 1, மகளிருக்கு 2, அதலெடிக்சில் மகளிருக்கு 5, ஆண்களுக்கு 54, பளுதுாக்குதல் ஆண்களுக்கு 16, மகளிருக்கு 4, மல்யுத்தம் ஆண்களுக்கு 17, மகளிருக்கு 2, ஜூடோவில் ஆண்களுக்கு 9, மகளிருக்கு 4, குத்துச்சண்டையில் ஆண்களுக்கு 9, மகளிருக்கு 3, நீச்சலில் ஆண்களுக்கு 44, மகளிருக்கு 5, வாலிபாலில் ஆண்களுக்கு 6, மகளிருக்கு 2, டேக்வாண்டோவில் ஆண்களுக்கு 4, மகளிருக்கு 2, துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கு 21, மகளிருக்கு 2, கூடைப்பந்தில் ஆண்களுக்கு 6, கைப்பந்தில் ஆண்களுக்கு 12, ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்சில் 9, கராத்தேயில் ஆண்களுக்கு 9, மகளிருக்கு 2, பாடி பில்டிங்கில் ஆண்களுக்கு 8, மகளிருக்கு 2, ஆண்களுக்கான பாட்மின்டனில் 10ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.

வயது வரம்பு: ஜனவரி 13, 2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி
யிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து ‘The DIG, Group Centre, CRPF, Jharoda Kalan, New Delhi110072’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.1.2019.
மேலும் விவரங்களுக்கு:www.crpf.gov.in/recruitmentdetails.htm?162/AdvertiseDetail என்ற லிங்க்கைப் பார்க்கவும்.