அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

CONFIRM Vs CONFORM 


வீட்டில் மொபைல் போன் மெசேஜுகளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்த ரவி ‘மார்ச் 3  மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பம்’ என்று ரகு அனுப்பிய SMS வாசகத்தைப் பார்த்தான். உடனே, ‘Is it conformed news sir?’ என திருப்பி SMS செய்தான் ரவி.

அதற்கு ‘It is not ‘conformed’ but ‘confirmed’ என sms மூலம் பதிலளித்தார் ரகு. அடுத்த நாள் அலுவலகம் சென்றதும் ரகு அனுப்பிய வார்த்தையின் விளக்கத்திற்காக எதிரில் வந்தமர்ந்த ரவி, “இப்ப சொல்லுங்க சார்…. கன்ஃபைம்-க்கும் கன்ஃபாம்-க்கும் உள்ள வித்தியாசத்தை” என்றான்.

ரவியைப் பார்த்து ரகு, “‘confirm’  கன்ஃபைம் என்றால் உறுதிப் படுத்த கூறுதல், மெய்ப்பித்தல் அல்லது ஊர்ஜிதப்படுத்துதல் என்று பொருள். அதாவது, to state that something is definitely true or correct with evidence. சப்போஸ் அடுத்த மாதத்திலிருந்து அனைவருக்கும் சம்பள உயர்வு உண்டு என்ற செய்தி வருகிறது என்றால், நீ அதை confirm செய்துகொள்ள வேண்டும்.

 அடுத்து conform  கன்ஃபாம் என்றால் இணங்குதல், ஒத்துப்போகுதல். (to comply with rules, standards or laws) அதாவது, சமீபத்தில நீ பார்த்திருப்ப… நிறைய கடைகளில் பிளாஸ்டிக் பைகளைத் தருவதில்லை. ஏன்னா 50 மைக்ரான் thicknessக்கும் கீழாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.

அப்படியும் கடைக்காரர் உனக்குத் தருகிறார் என்றால், that bag has been produced in conform with the government rules and regulations. அதுமட்டுமில்ல.. நேற்றைய ஆங்கிலச் செய்தித்தாளின் இரண்டாம் பக்கத்தில் ‘Food and Drug Department urges water processors to conform to requirements…’ என்று வந்திருக்கிறது. எடுத்துப் படித்துப் பார். நன்றாகப் புரியும்.” என்றார்.

 சட்டென்று ரவி, “சார்… எனக்கு இப்ப ஞாபகம் வருதுங்க சார். எங்க வீட்டுக்கு முதல் முதலா வந்திருந்தபோது ‘this kitchen does not conform to hygiene regulations’ன்னு சொன்னீங்க. அப்ப எனக்கு அதனோட முழு அர்த்தம் சரியா புரியல. இப்பதான் புரியுது. சூப்பர்ங்க சார். இந்தாங்க… நீங்க கேட்ட ஃபைல்” என்றபடி ஒரு ஃபைலை நீட்டினான்.

அதைக் கையில் வாங்கிய ரகு “நான் சொன்ன மாதிரிதானே தயாரிச்சிருக்க?” என்று சந்தேகமாக கேட்டார். “Here by I confirm that this file, in height and breadth, conformed to the rules and regulation laid by you Sir” என்றபடியே எழுந்து சென்றான் ரவி.  ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள: englishsundar19gmail.com       

சேலம் ப.சுந்தர்ராஜ்