கிராமப்புற சுகாதார செவிலியர் பணி!



வாய்ப்புகள்

2804 பேருக்கு வாய்ப்பு


தமிழகத்தில் தற்காலிகக் கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2804 பணியிடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தத் தற்காலிகக் கிராமப்புறச் சுகாதார செவிலியர்  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 மாத Auxlliary Nurse Midwife (MNM) நர்ஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் Tamil Nadu Nurse and Midwives Council சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

முறை: தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்.ஆர்.பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புறச் செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே 24.2.2017 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 ஐ விண்ணப்பக்கட்டணமாக கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி(ஏ), எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்தினால் போதும். தேர்வு செய்யும் முறை:  விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

பணி நியமனம்:  தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர்  பணி உள்ள இடங்களில் அவர்களை நியமனம் செய்வார்.விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் இறுதி நாள்:  வங்கிகளில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதற்கு 28.2.2017 கடைசி நாளாகும்.இது குறித்து  மேலும் முழுமையான விவரங்களை அறிய www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.