வாய்ப்புகள்



வேலை ரெடி!

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு
அறிவிப்புகள் இங்கே...

+2 முடித்தவர்களுக்குத் தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை!

நிறுவனம்: நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி
வேலை: மல்டிடாஸ்க் சர்வீஸ், கிளர்க் போன்ற வேலைகள்
காலியிடங்கள்: 66. மல்டி டாஸ்க் சர்வீஸ் வேலையில் மட்டுமே 50 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது வரம்பு: 18-25
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.2.17
மேலதிக தகவல்களுக்கு: http://www.davp.nic.in

எஞ்சினியர் பட்டதாரிகள் ராணுவ அதிகாரி ஆகலாம்!

நிறுவனம்: எஞ்சினியரிங் தொழில்நுட்பப் பிரிவு பட்டதாரிகளுக்கான தேர்வு(ஷார்ட் சர்வீஸ்
கமிஷன்)
வேலை: அதிகாரிகள்
காலியிடங்கள்: 196. இதில் ஆண்களுக்கு 175, பெண்களுக்கு 20 மற்றும் விதவைக்கு 1 என காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: இளங்கலை எஞ்சினியரிங்
பட்டப்படிப்பு
வயது வரம்பு: 20-27
தேர்வு முறை: மெரிட், மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

மருத்துவப் பட்டதாரிகளுக்கு சீனியர் ரெசிடெண்ட் பணி

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சர்வீஸ்(உத்தரகாண்ட்)
வேலை: மருத்துவர்(சீனியர் ரெசிடெண்ட்)
காலியிடங்கள்: 89
கல்வித்தகுதி: எம்.டி., எம்.எஸ். மற்றும்
டி.என்.பி.யில் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: 33. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17
மேலும் தகவல்களுக்கு:
www.aiimsrishikesh.edu.in

ஐ.டி.பி.ஐ. வங்கியில் மேனேஜர் பணி

நிறுவனம்: இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: டெபுடி ஜெனரல் மேனேஜர், அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் மற்றும் மேனேஜர் என்ற 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 111. இதில் முதல் வேலையில் 13, இரண்டாம் வேலையில் 17 மற்றும் மூன்றாம் வேலையில் 81 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: விவசாயம் (அ) கால்நடைத் துறையில் டிகிரி (அ) விவசாயம் தொடர்பான முதுகலைப் படிப்பு.
வயது வரம்பு: 28-40
தேர்வு முறை: குரூப் டிஸ்கஷன், ஆன்லைன் தேர்வு, இன்டர்வியூ
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17
மேலதிக தகவல்களுக்கு: www.idbi.com

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் ஸ்டெனோ வேலை

நிறுவனம்: தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை(CISF)
வேலை: அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் எனும் பதவியிலான ஸ்டெனோ வேலை
காலியிடங்கள்: 69.
கல்வித் தகுதி: 10வது (அ) பிளஸ் 2
வயது வரம்பு: 18-25
தேர்வு முறை: உடற் தேர்வு, எழுத்து, திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.2.17
மேலதிக தகவல்களுக்கு: www.cisf.gov.in

கணக்கியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை

நிறுவனம்: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்
வேலை: நிர்வாக அதிகாரி, தலைமைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள்
காலியிடங்கள்: 154.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், புரடக்‌ஷன் போன்ற எஞ்சினியரிங் படிப்பு மற்றும் சி.ஏ., ஐ.சி.டபிள்.யூ
வயது வரம்பு: பணிக்கேற்ப மாறுபடும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.2.17
மேலதிக தகவல்
களுக்கு: www.bemlindia.com

டிப்ளமோ படிப்புக்கு எண்ணைக் கழகத்தில் வேலை

நிறுவனம்: சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்(CPCL)
வேலை: ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட், ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனாலிசிஸ்ட் உட்பட 10 பிரிவுகளில் வேலைகள்
காலியிடங்கள்: 94
கல்வித்தகுதி: எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 30க்குள். சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு
தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்வு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.2.17
மேலதிக தகவல்களுக்கு: www.cpcl.co.in

நீர் மின்சாரக் கழகத்தில் எக்சிகியூட்டிவ் பணி

நிறுவனம்: நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேஷன்(அஸாம்)
வேலை: ஃபெல்லோஷிப் எக்சிகியூட்டிவ்
காலியிடங்கள்: 214
கல்வித்தகுதி: பி.எஸ்.சி., பி.இ. மற்றும் பி.டெக். படிப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.2.17
மேலதிக தகவல்களுக்கு: www.nhpcindia.com

தொகுப்பு: டி.ரஞ்சித்