பேக்கேஜிங் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு!



அறிவிப்பு

B.E., B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங்(IIP) என்பது 1996ல் மத்திய அரசால் மும்பையில் அமைக்கப்பட்ட தன்னாட்சிக் கல்வி நிறுவனம்.  மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ சிட்டிகளில் செயல்பட்டுவருகின்றன. தற்போது இக்கல்வி நிறுவனத்தில் போஸ்டு கிராஜுவேட் டிப்ளோமா இன் பேக்கேஜிங் பட்டப் படிப்புக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி: ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதங்களில் இந்தியாவின்  மெட்ரோ சிட்டிகளில் நடத்தப்படும் இந்தப் படிப்புக்கான  நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், முழுநேரக் கல்வி முறையில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் போன்ற அறிவியல் மற்றும் டெக்னாலஜியை முதன்மையாகக்  கொண்ட பி.இ; பி.டெக்; பி.எஸ்சி. போன்ற இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 25 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.மேலும் OBC மாணவர்களுக்கு 3 வருட வயதுத் தளர்வும்,  SC/ST மாணவர்களுக்கு 5 வருட வயதுத் தளர்வும் உண்டு.சேர்க்கை முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iip-in.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500க்கு ‘Indian Institute of Packaging’  என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க டிடி எடுத்து, விண்ணப்பப்படிவம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சுய முகவரியிட்ட 2 அஞ்சல் உறைகளையும் வைத்து Indian Institute of Packaging Plot E-2, Road No. 8, MIDC Area, Andheri East, Post Box No. 9432, Mumbai 400093 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.6.2017
மேலும் விவரங்களுக்கு http://www.iip-in.com/site/default.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட் குருசாமி