பப்பரப்பா வித்தை!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘அசுரன்’ படத்தில் ஆட்டினை ஆட்டை போட்ட மூணார் ரமேஷ் குறித்த விரிவான நேர்காணலை வழங்கியதற்கு நன்றி. ‘வண்ணத்திரை’ இதழ் ஒன்றில்தான் இதுபோல இரண்டாம் மட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது.
- கவிஞர் நீலமலை ஜே.பி., உதகை.

காமரேகை குறித்த சரோஜாதேவியின் பதில் யதார்த்தம். உடனே உள்ளங்கையில் என்னுடைய ரேகை பத்திரமாக இருக்கிறதா என்று பதட்டப்பட்டு பார்த்தேன்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘கைதி’, ‘பிகில்’ படங்களுக்கு அவற்றின் தரத்துக்கு ஏற்ப பக்காவான விமர்சனம் வழங்கியதற்கு நன்றி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

நடுப்பக்க பஞ்சு மெத்தையின் பப் பரப்பா வித்தையைக் காண ஆவலோடு காத்திருக்கிறோம்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

29-ஆம் பக்க மேக்னாவை பார்த்தா சங்கு மட்டுமேவா தெரியுது? ஒட்டுமொத்த சங்கமே அங்கேதானே குடியிருக்கு?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

குளிக்கும்போது நிக்கி பாடுகிறார் என்கிற அரிய தகவலை எல்லாம் தேடிப்பிடித்து தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு தரும் உங்கள் சேவையே சேவை சார்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

வெகுகாலத்துக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வருகிறார் தங்கர் பச்சான். அவரது மகன் விஜித் பச்சான் ஹீரோவாக பெரும் வெற்றியடைய வாழ்த்துகள்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லுர்.