மீண்டும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணி!சந்தானம் இயக்குநர் ராஜேஷ்.எம் இணைந்துப் பணியாற்றிய ‘சிவா மனசுலே சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ ஆகியப் படங்களில், சந்தானத்தின் காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரமாதமாக எடுப்பட்டது. தற்போது கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வரும் சந்தானம், தன் அபிமானத்துக்குரிய ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இது முழுநீள காமெடி படம். சந்தானத்தின் கெட்டப் முற்றிலும் மாற்றப்படுகிறது. இதுவரை சந்தானம் நடித்த படங்களில், இப்படத்தின் காமெடி தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனி காமெடி ஸ்கிரிப்ட் டீம் உருவாக்கப்பட்டுள்ளது.

- எம்