ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான்!‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்பேட்ட புராணம்

“ரஜினி சாரைப் பத்தி புதுசா சொல்ல எதுவுமே இல்ல. ‘பேட்ட’ படத்துக்காக வாரணாசியிலே ஷூட்டிங். அங்கே நல்ல, பெரிய ஹோட்டல் எல்லாம் இருக்கு. இருந்தாலும் கூட ஒரு சாதாரண ஹோட்டலில்தான் அவர் தங்கினார். அவ்வளவு சிம்பிள் அவர்.

அதுவும் இல்லாம, புரொடக்‌ஷன் சைடுல இருக்கறவங்ககிட்ட, அடிக்கடி ‘பட்ஜெட்டை தாண்டிப் போயிருச்சா, பட்ஜெட்டை தாண்டலைதானே?’ என்று கேட்டுக்கிட்டே இருந்தார்.

முன்னாடி ‘எந்திரன்’ எடுத்தப்போ சொன்னதையேதான் இப்பவும் சொல்றேன். சூப்பர்ஸ்டார்னா அது ரஜினி சார் மட்டும்தான். இனி யாரும் வரப்போறதும் இல்லை. பொறக்கப் போறதும் இல்லை.”