மாணிக்



சிரிப்பு பாட்ஷா!

நாயகன் மா.கா.பா.ஆனந்த் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறார். ஒரு கட்டத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு அற்புத வரம் ஒன்று கிடைக்க, அந்த வரத்தை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அது என்ன வரம், அவருடைய முயற்சி வெற்றி அடைந்ததா என்பதை சிரிப்புத் தோரணம் கட்டி சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக மா.கா.பா. ஆனந்த் ஜோராக மார்தட்டிக் கொள்ளலாம். அப்படி தனித்துவமாக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்து மனதில் நிற்கிறார். நாயகி சூசா குமார் பாடல் காட்சிக்கு மட்டும் வந்து போகிறார். இரண்டாவது ஹீரோ வத்சன் யதார்த்த நடிப்பில் கவனிக்க வைக்கிறார். வில்லனாக வரும் அருள்தாஸ் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமா வில்லன்களை கலாய்க்கும்போது தியேட்டரே சிரிப்பலையில் மூழ்குகிறது.

தரண்குமாரின் இசையும், எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப்பிடிக்கும் பிக் பில்லர்ஸ்.லாஜிக் பார்க்காமல் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மகிழ்விப்பதோடு, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்காக சொல்லும் தண்டனை மூலம் படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் மார்ட்டின்.