சாக்‌ஷி அகர்வாலின் நியூஇயர் பார்ட்டி!



புதுவருடத்தை எங்கே கொண்டாடுவது என்று ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு விடுகிறார்கள் நட்சத்திரங்கள்.“புதுவருட கொண்டாட்டங்களை கோலாகலமாக நடத்திவரும் கன்ட்ரி கிளப்பில் 2019ஐ வரவேற்கப் போகிறேன்” என்று சாக்‌ஷி அகர்வால் நம்மிடம் சொன்னார்.“ஆசியாவிலேயே பிரும்மாண்டமான முறையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

அவர்களோடு சேர்ந்து நானும் ரசிகர்களோடு கொண்டாடப் போகிறேன். இது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளோடு அமையும்” என்றும் சாக்‌ஷி சொல்கிறார்.கன்ட்ரி கிளப் சென்னையில் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், துபாயிலும் இதுபோல நட்சத்திரக் கொண்டாட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

- குமார்