சரோவுக்கு என்னதான் ஆச்சு?



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சத்தமின்றி விலையேற்றம். பரவாயில்லை. ‘வண்ணத்திரை’க்கு வாரம் பத்து ரூபாய் என்பதே கம்மிதான். சில சமயங்களில் பிளாக் டிக்கெட் கணக்காக மார்க்கெட்டில் வாங்குவதும் உண்டு.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

இந்த வார ‘வண்ணத்திரை’யின் 40-ஆம் பக்க திறந்தவெளி கலையரங்கத்தில் கச்சேரி நடத்த நாங்க ரெடி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

சித்தப்பா ரஜினிக்கு வில்லியாக நடிக்கவேண்டும் என்கிற மதுவந்தியின் ஆசை சூப்பர். விரைவில் அவரது விசித்திர விருப்பம் நிறைவேறட்டும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடிகர் குமரவேலின் திரையுலகப் ‘பயணம்’, டைட்டில்ஸ் டாக் பகுதியில் மிகச் சிறப்பாக வந்திருந்தது. தொடர்ந்து ராதாபாரதி படங்களில் மட்டுமே நடிக்கிறார். மற்ற இயக்குநர்களின் படங்களிலும் இவரைக் காண ஆவல்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அடிக்கடி சரோஜாதேவிக்கு லீவு கொடுத்து விடுகிறீர்களே? எங்க சரோவுக்கு என்னதான் ஆச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஆஷ்னா ஜாவேரியின் முன்னட்டை யோகாசனமும், பின்னட்டை தியான வடிவமும் சுவாமிகளை மிகவும் கவர்ந்திருக்கிறது என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ தொடரில் ‘குணா’ ரோஷிணியை நினைவுபடுத்தி எங்களையெல்லாம் ‘அபிராமி அபிராமி’ என்று புலம்ப வைத்துவிட்டார் பைம்பொழில் மீரான்.
- கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூர்.