தோணி கபடி குழு



களத்தை கைப்பற்றும் கபடிகுழு!

கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்துள்ளது ‘தோனி கபடிகுழு’கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களாக நாயகன் அபிலாஷும் அவரது நண்பர்களும் இருக்கிறார்கள். சதா நேரமும் கிரிக்கெட்டும், கிரவுண்டுமாக இருக்கும் அவர்களுக்கு கிரிக்கெட்தான் கண்கண்ட தெய்வம். கிரவுண்ட் கோயில்.
ஒரு கட்டத்தில் அந்த கிரவுண்டை ஒருவர் விலைக்கு வாங்கியதால், அங்கு யாரும் விளையாட முடியாத சூழல் ஏற்படும்போது அந்த கிரவுண்டை தாங்களே விலைக்கு வாங்க நாயகனும் அவரது நண்பர்களும் முடிவு செய்கிறார்கள். அதற்காக பல வழிகளில் பணம் திரட்டினாலும், ஒரு கட்டத்தில் இருபது ஆயிரம் ஷார்ட்டேஜ் ஏற்படுகிறது.

அந்தப் பணத்திற்காக கபடி விளையாட களத்தில் இறங்கும் இந்த கிரிக்கெட் வீரர்கள், கபடி போட்டியில் வெற்றி பெற்று கிரவுண்டை கைப்பற்றினார்களா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக புதுமுகம் அபிலாஷ் நடித்திருக்கிறார்.

கேரக்டரை உள்வாங்கி உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார். நாயகி லீமா அளவாக நடித்து நம்மைக் கவர்கிறார்.கிரிக்கெட் பைத்தியமாக இருக்கும் இளைஞர்களுக்கு கபடியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் வகையில் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பி.ஐயப்பன்.