பார்த்தாலே தெரியுது!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அட்டைப்படத்துலே டூபீஸ். நடுப்பக்கத்துலே ஹாட்பீஸ். ‘வண்ணத்திரை’ன்னாலே வாலிப வயோதிக அன்பர்களுக்கு திருவிழாதான்.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

நடுப்பக்க கதவு திறந்திருக்குன்னு நீங்க சொல்லித்தான் தெரியணுமா? பார்த்தாலே தெரியுதே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் இயக்குநர் நித்திலன் எழுதிய ‘குரங்கு பொம்மை’ கட்டுரை பிரமாதம். சினிமா செய்திகளுக்கு மத்தியில் இதுபோன்ற வாழ்வியல் அனுபவ சிந்தனைகள் இடம்பெறுவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

வண்ணத்திரை எண்ணத்திரையானது; எண்ணத்திரை வெள்ளித்திரையானது; வெள்ளித்திரை வெள்ளிக்கிழமை வலம் வரும் வெண்ணிலவாக மனதில் பதிந்து நினைவில் நின்றது.
- கே.முருகன், திருவண்ணாமலை.

‘கோலமாவு கோகிலா’ படத்தை புகழ்ந்து விமர்சித்திருந்தாலும், ‘அறம்’ தவறலாமா என்று கேள்வி எழுப்பியதின் மூலம் படைப்பாளிகளின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியிருக்கிறீர்கள்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘ஆறிலிருந்து ஆறுவரை’ படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போது இன்னமும் இருட்டு அறை முரட்டுக்குத்து ஃபீவரிலிருந்து தமிழ் சினிமா வெளிவரவில்லையோ என்று வருத்தமாக இருக்கிறது.
- குந்தவை, தஞ்சாவூர்.

அதிகம் தெரியாத சினிமா சென்டிமென்ட்ஸ் குறித்த தொகுப்பு அருமை.
- ரவிசங்கர், குடியாத்தம்.