ஹெல்மெட் போட்டுக்கங்க!
சரோஜாதேவி பதில்கள்
* முதலிரவில் யாருடைய சாயம் முதலில் வெளுக்கும்? - கே.நடராஜன், திருவண்ணாமலை. வெளுக்கிறவரைக்கும் துவைக்க வேண்டியதுதான். வெற்றி இருவருக்குமேதான்!
* தேனைவிட தித்திப்பு உண்டா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. மலருக்கு மலர் தாவும் வண்டுகளிடம்தான் கேட்கணும்.
* ஆண்கள், பாலியல் புகார் கொடுப்பதில்லையே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. எதையும் தாங்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் போல.
* மயக்கத்துக்கும், கிறக்கத்துக்கும் என்ன வித்தியாசம்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். கிறங்குறவங்களுக்கு மயங்குறவரைக்கும் உறக்கமே வராது.
* ‘பியார் பிரேமா காதல்’ கணக்காக கல்யாணத்துக்கு முன்னாடியே முற்றிலும் நனைந்துவிடலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உங்க ரிஸ்க். விபத்தைத் தவிர்க்க அட்லீஸ்ட் ஹெல்மெட்டாவது போட்டுக்கங்க கதிர்.
|