கல்யாணம் எப்போ?இந்தியன் சூப்பர்ஹீரோவாக சரித்திரப் புனைவுப் படத்தில் நடித்த அந்த கட்டழகு ஹீரோவுக்கும், யோகா செய்து உடலை கும்மென்று வைத்திருக்கும் நடிகைக்கும் விரைவில் திருமணம் என்று ஹைதராபாத் வட்டாரங்களில் ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே வயது நாற்பதை நெருங்கிவிட்டது.

ஹீரோயின் வீட்டில் ஓக்கே சொல்லிவிட்டாலும், ஹீரோவின் குடும்பத்தார் இன்னும் பஞ்சாயத்து செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி. ஹீரோவின் குடும்பத்தாரை சம்மதிக்க வைக்க நடிகையின் வீட்டார் கோயில் கோயிலாக ஏறி இறங்கி ஏதோ பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

யாகம், பரிகாரம் என்று இலட்சங்களில் செலவு செய்வதைவிடுத்து எட்டணாவுக்கு ஒரு மஞ்சக்கயிறு வாங்கி ஹீரோயின் கழுத்தில் ஹீரோவை கட்டவைத்து விடலாமே என்று அங்கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.

- ஆலந்தூர் அன்சாரி