வஞ்சகர்களின் உலகம்!



இயக்குநர் ஜனநாதனின் உதவியாளர் மனோஜ் பீதா எழுதி இயக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. இதன் நாயகன் புதுமுகம் சிபி. நாயகிகளாக அனிஷா அம்ப்ரோஸ், சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர்.

சாம் CS இசையமைக்கிறார்.“கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் த்ரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக்தான் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும்.

குரு சோமசுந்தரம், கேங்ஸ்டர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட ஐந்து நிமிட காட்சியை ஒரே டேக்கில் ஓக்கே செய்து மிரளவைத்தார். அவரது அபார  நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மாறுதல்களைச் செய்யவேண்டியிருந்தது.

மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். அவரது சிறந்த ஒளிப்பதிவு நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். ஸ்கிப்ரிட்ல இருந்ததைவிட அவுட்-புட் சிறப்பாக வந்திருக்கு’’ என்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா.

- எஸ்