விரல்நடிகர் கைவசம் வைத் திருக்கும் நிறையப்படங்களில் வேட்டையாடும் படமும் ஒன்று. மற்ற படங்களின் வேலைகளோடு அந்தப் படத்தின் வேலைகளும் அவ்வப்போது நடந்து கொண்டிருக் கின்றனவாம்.அந்தப்படத்துக்கு இசையமைக்க தமது நெருங்கிய நண்பர் என்பதால் இசை வாரிசு இசையமைக்கிறார் என்று அவரைக் கேட்காமல் இவரே அறிவித்து விட்டாராம். தொடக்கத்தில் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம்.
படத்துக்குப் பாடல்கள் போட்டுத்தரச் சொல்லி அவரை அணுகியபோது, நான் எப்போது இந்தப்படம் செய்ய ஒப்புக்கொண்டேன் என்று கேட்டாராம்.பதில் சொல்ல முடியாமல் முழித்த தயாரிப்புத் தரப்பினர், விஷயத்தை நடிகரிடம் சொல்ல, அவர் இசையமைப்பாளரிடம் பேசியிருக்கிறார். உடனே நடிகரைக் காய்ச்சி எடுத்து விட்டாராம். நான் அறிவித்தது தப்புதான். அதற்காக நீங்கள் மறுத்தால் ரொம்பவும் அவமானமாகப் போய்விடும் என்று கெஞ்சிக் கூத்தாடி அவரையே இசையமைக்கச் சம்மதிக்க வைத்தாராம் நடிகர்.