‘‘நகரத்து வாழ்க்கையோடு நாம் பின்னி பினைந்திருந்தாலும் நம்முடைய கிராமத்து ஞாபகங்கள் நம் நெஞ்சை விட்டு பிரிந்திருக்காது. அந்த கிராமத்தையும், கிராமத்து வாழ்க்கையையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் படம்தான் விஷ்ஷிங் வெல் புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரிக்கும் ‘ஒத்த வீடு’’’ என்கிறார் பாலு மலர்வண்ணன்.
டைரக்ஷன் இவருக்கு புதுசு என்றாலும் சினிமா இவருக்கு பழசு. சினிமா பத்திரிகையாளர், பி.ஆர்.ஓ, சிறுகதை எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட இவர் தன்னுடைய அனுபவத்தால் ஏறத்தாழ மூன்று வாரங் களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்.
‘‘கிராமங்களில் ஒத்த வீடு பற்றி நிறைய கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படி ஒரு ஒத்த வீட்டில் நடக்கும் சம்பவம்தான் படத்தின் கரு. நாயகனாக திலீப் நடிக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதளவுக்கு கிராமத்து இளைஞராக வாழ்ந்திருப்பார்.
நாயகியாக பெங்க ளூருவை சேர்ந்த ஜானவி நடிக்கிறார். வசனங்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வெளிப் படுத்தி யிருப்பார். தலைமை வேடம் எனுமளவுக்கு வடிவுக்கரசியின் கேரக்டர் இருக்கும். சாமியாடி என்ற வித்தி யாசமான வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கரும், விஷமத்தனமான வில்லன் வேடத்தில் ‘ஒச்சாயி’ தயாரிப்பாளர் திரவிய பாண்டியனும் நடிக்கிறார்கள். வீ.தஷியின் இசை படத்துக்கு மிகப்பெரிய பாலமாக இருக்கும். இந்தப் படம் பார்த்த பிறகு உங்கள் சொந்த கிராமத்துக்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்துவது நிச்சயம்’’ என்கிறார் இயக்குனர் பாலு மலர் வண்ணன்.
எஸ்