‘தெய்வத்திருமகள்’ குழந்தை நட்சதிரம் சாராவுக்கு விமானப் பயணம் என்றால் ரொம்ப பிரியம்.
ஏர்னாகுளம் தேவரா பகுதியிலும் குருவாயூரிலும் சொந்த பிளாட் வாங்கியுள்ளார் நயன்தாரா.
‘மிட்நைட் சில்ரன்’ படத்தில் சேரிப்பெண்ணாக நடித்துள்ளார் ஸ்ரேயா.
‘தசாவதாரம்’ படத்தில் ‘முகுந்தா... முகுந்தா..’ பாடலைச் சொந்தகுரலில் பாடும்படி கே. எஸ். ரவிகுமார் கேட்டுக்கொண்டதை அசின் மறுத்துவிட்டாராம். ‘கஜினி’ படத்தில் ‘ரஹத்துல்லா..’ பாடலைப் பாடும்படி ஏ. ஆர். முருகதாஸ் சொன்னதையும் அசின் மறுத்துவிட்டாராம்.
ராணிப்பெட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து ‘டேஷிங் லெவன்’ என்கிற கிரிக்கெட் டீம் வைத்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
அண்ணாநகர் தோல் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக வேலை பார்த்திருக்கிறார் ஸ்ரீமன்.
மேடை நாடகங்களில் நடிப் பதற்கு ஆர்வம் காட்டுகிறார் அனுயா.
‘அலிபாபா’ கிருஷ்ணா நடிக்கும் ‘கழுகு’ படத்தில், ‘கல்யாணத்துக்கு முன் காதல், கல் யாணத்துக்குப் பின் காதல்’ என்ற வகையில் கதை அமைத் துள்ளார்கள்.
இயக்குனர் அகத்தியனுக்கு அந்தப் பெயரை சூட்டியவர் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன். அவரது இயற்பெயர் கருணாநிதி. கொஞ்ச காலம் ரவிதாஸ் என்ற பெயருடன் வலம் வந்தவர்.
சொந்தமாக துவங்க இருக்கும் பதிப்பகத்துக்கு ‘தளிர்’ என்று பெயர் வைக்க உள்ளார் கவிஞர் விவேகா. அவரது மகளின் பெயர் செந்தளிர்.
கொச்சியில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் பற்றி நிறைய பக்திப் பாடல்கள் பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார் ரம்யா நம்பீசன்.
‘‘சிக்கென உடலை வைத்துக் கொள்வது எப்படி என்று த்ரிஷாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார் நமீதா.
நெல்பா